எலும்பு ஆரோக்கியத்திற்கு வில்லன்களாகும் உணவுகள்! இவற்றை தவிர்த்தால் கவலையே இல்லை

Bone Weakening Foods: எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் உணவுகளின் பட்டியலில் பல உணவுகள் இருந்தாலும், அவற்றில் முக்கியமான உணவுகளின் பட்டியல் இது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 23, 2023, 09:30 PM IST
  • எலும்பு ஆரோக்கியத்தை மோசமாக்கும் உணவுகள்
  • எலும்புகளை பலவீனமாக்கும் உணவுகள்
  • கால்சியத்தை உடல் உறிஞ்சுவதை தடுக்கும் உணவுகள்
எலும்பு ஆரோக்கியத்திற்கு வில்லன்களாகும் உணவுகள்! இவற்றை தவிர்த்தால் கவலையே இல்லை title=

எலும்புகளுக்கு வில்லன்கள்: உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எலும்புகள் வலுவாக இருப்பது அவசியமான ஒன்று. மனிதர்கள், குழந்தையாக இருந்து வளர்ந்து வரும்போது, எலும்புகளின் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அவர்களது உடல் தோற்றம் அமைகிறது. எனவே, எலும்பு ஆரோக்கியத்தை சீராக்கும் உணவுகளை குழந்தைகளில் இருந்தே கொடுத்து வருவது முக்கியமானதாகும்.கால்சியம், வைட்டமின் டி, மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் அடங்கிய சரிவிகித உணவை உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். 

வயதாகும்போது, ​​​​நமது எலும்புகள் தேய்மானம் அடையும் அபாயம் உள்ளது. எலும்புகளின் தேய்மானம் நமது இயக்கத்தையும் ஆரோக்கியத்தையும் குறைக்கிறது. எலும்புகள் தேய்மானம் அடைவது இயற்கையான செயல் என்பதால் அதனை முற்றிலும் தடுக்க முடியாது.

ஆனால், நாம் உண்ணும் உணவுகள், எலும்புகளின் ஆரோக்கியத்தை வீணாக்குவதை தவிர்க்க முடியும். நமது எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். போதுமான கால்சியம் உட்கொள்வது நமது எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. 

மேலும் படிக்க | Figs: நோய்களை போக்கும் அத்தியின் நன்மைகள்! ஆண்மைக் குறைவை சீராக்கும் அற்புதமான பழம்

எலும்புகளை வலுப்படுத்தவும். எலும்பு இழப்பைத் தடுக்கவும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உணவுகளே தீர்வாக இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எலும்புகளை வலுவாக்கும் என்பதைத் தெரிந்துக் கொண்டு அதைப் பின்பற்றி வருவதைப் போலவே, எந்த உணவுகளை தவிர்த்தால், எலும்பு ஆரோக்கியம் மேம்படும் என்பதையும் தெரிந்துக் கொள்வது அவசியம் ஆகும்.

இந்த கட்டுரையில், எலும்புகளின் ஆரோக்கியத்தை சீர்கெடுக்கும் உணவுப் பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வோம், அவற்றை உட்கொள்வதால் எலும்புகள் எப்படி வலுவை இழக்கும் என்பதையும் தெரிந்துக்கொள்வோம்.

எலும்புகளை தேய்மானம் அடையச் செய்யும் உணவுகள்

சோடா
சோடாவில் காஃபின் மற்றும் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டு கூறுகளும் எலும்புகளில் இருந்து கால்சியத்தை இழுக்கின்றன. இதனால் எலும்புகள் பலவீனமடையும்.

சர்க்கரை நிறைந்த பானங்கள்

சோடாவைத் தவிர, குளிர் பானங்கள், பழச்சாறுகள் மற்றும் ஆற்றல் பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த மற்ற பானங்களும் எலும்புகளை பலவீனப்படுத்துகின்றன. இந்த பானங்களில் காஃபின் மற்றும் பாஸ்போரிக் அமிலமும் உள்ளது.

மேலும் படிக்க | கீரைகளில் சிறந்தது எது? தயக்கமே இல்லாமல் வரும் ஒரே பதில் முருங்கைக்கீரை தான்!

ஜங்க் உணவு

குப்பை உணவில் அதிக கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளது, ஆனால் அதில் ஊட்டச்சத்துக்கள் இல்லை. நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதால், எலும்புகளை வலுப்படுத்த தேவையான சத்துக்கள் கிடைக்காது.

காஃபின்

காஃபின் ஒரு டையூரிடிக் ஆகும், அதாவது உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றுகிறது. இது எலும்புகளில் கால்சியம் அளவைக் குறைக்கலாம்.

மதுபானம்

மது அருந்துவதால் எலும்புகளும் பாதிக்கப்படும். ஆல்கஹால் உட்கொள்வது எலும்புகளில் இருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ரத்த சர்க்கரையை குறைக்கும் பானங்கள்! இஞ்சிக்கு மிஞ்சியது ஏதாவது உண்டா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News