தினமும் ஒவ்வொருவரது சமையலறையிலும் பல முறை தேநீர் தயார் செய்யப்படுகிறது, ஒவ்வொரு முறை நாம் தேநீர் தயாரித்த பிறகும் அந்த தேயிலைகளை தூக்கி எறிந்துவிடுவோம். உண்மையாகவே இப்படி பயன்படுத்திய தேயிலைகளை நாம் தூக்கி எறிவது தவறான செயல், இவை நமக்கு சமயலறையில் பல வகைகளில் உபயோகமாக இருக்கும். இது முழுமையான பயன்கள் எல்லாம் என்னவென்று தெரியாமலேயே நாம் இவற்றை வீணாக குப்பையில் தூக்கி வீசி விடுகிறோம். தேநீர் தயாரித்த பிறகு மிச்சமிருக்கும் தேயிலைகளை கொண்டு சமைப்பதில் இருந்து சுத்தம் செய்வது வரை நீங்கள் பல விஷயங்களை செய்யலாம்.
1. உங்கள் சாலட்டை சீசன் செய்ய தேயிலைகள் உதவும், இது உங்களுக்கு சற்று புதியதாக தோன்றினாலும் இதுதான் உண்மை. உண்மையாகவே தேயிலைகள் உங்கள் சாலட்களுக்கு ஒரு சிறந்த ஃபிளேவரை கொடுக்கின்றன. ஈரமான தேயிலை இலைகளை நேரடியாக உங்கள் சாலட்டில் சேர்க்கலாம், ஆனால் நீங்கள் சாலட்டில் செரிக்கக்கூடிய தேயிலை அன்று காய்ச்சிய தேநீரிலிருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் இதை செய்தால் ரத்த சர்க்கரை அளவு சீராகும்
2. தேயிலை ஊறுகாய்க்கு சிறந்த பிளேவரை கொடுக்கிறது என்றால் உங்களால் நம்பமுடியுமா? உண்மைதான், ஊறுகாய்க்கு தேயிலை சிறந்த முறையில் பயன்படுகிறது. பயன்படுத்திய தேயிலை இலைகள், எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஒரு மேசன் ஜாரில் வைத்துவிடுங்கள். இந்த ஊறுகாயை நீங்கள் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம் மற்றும் இதனை நீங்கள் சாண்ட்விச்கள், சாலடுகள் மற்றும் பிற உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.
3. பயன்படுத்தப்பட்ட தேயிலைக்கு உணவாக உதவுவது மட்டுமின்றி, சமையலறை மேற்பரப்புகளை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. எப்போதும் நீங்கள் சமயலறையை எப்போது சுத்தம் செய்வீர்களா அப்படியே தேயிலையை வைத்து சுத்தம் செய்யலாம். தேயிலையை வைத்து நீங்கள் சுத்தம் செய்யும்பொழுது சமயலறையிலுள்ள அழுக்கு, கிரீஸ் மற்றும் துர்நாற்றம் நீங்கிவிடும். உங்கள் சமையல் பாத்திரங்கள் மற்றும் கட்லரிகளில் இருந்து கறை மற்றும் துர்நாற்றத்தை அகற்ற இலைகளைப் பயன்படுத்தலாம்.
4. குளிர்சாதன பெட்டியில் நாம் பலவிதமான உணவுகளை வைத்திருப்பதால் சில சமயங்களில் அதனை திறக்கும்போது துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க நீங்கள் பயன்படுத்திய தேயிலையை உபயோகிக்கலாம். தேநீர் போட்டுவிட்டு மீதமுள்ள தேயிலைகளை உலர்த்தி ஒரு மஸ்லின் துணியில் பேக் செய்யவும், இந்த பையை குளிர்சாதன பெட்டியிலுள்ள உணவு வாசனையை போக்க குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இதனை மைக்ரோவேவ் மற்றும் ஓவனில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கவும் பயன்படுத்தலாம்.
5. குக்கீஸ்கள், கேக்குகள் மற்றும் மஃபின்கள் போன்ற வேகவைத்த உணவுகளில் தேநீரின் புதிய மற்றும் மூலிகைச் சுவையைச் சேர்க்கலாம். உங்கள் பேக்கிங் மாவில் சில பயன்படுத்திய தேயிலைகளைச் சேர்த்து, வித்தியாசமான மற்றும் தனித்துவமான சுவையுடன் உணவு வகைகளை நீங்கள் தயாரிக்கலாம்.
மேலும் படிக்க | டயட்ல இருக்கீங்களா? ஜாக்கிரதை!! இந்த பக்க விளைவுகள் உங்களை பாதிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ