Hair care Tips: முடி உதிர்தலை தடுக்க ‘இந்த’ 4 பொருட்களே போதும்..!!!

நம்மில் பலர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை, தலை முடி அதிகமாக உதிர்தல் பிரச்சனை என்றால் மிகை இல்லை.  சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இதற்கான தீர்வை எளிதாக பெறலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 4, 2021, 12:23 PM IST
Hair care Tips: முடி உதிர்தலை தடுக்க ‘இந்த’ 4 பொருட்களே போதும்..!!! title=

Hair care Tips: நம்மில் பலர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை, தலை முடி அதிகமாக உதிர்தல் பிரச்சனை என்றால் மிகை இல்லை.  சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இதற்கான தீர்வை எளிதாக பெறலாம். அதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து நிச்சயம் விடுபடலாம்.

தவறான வாழ்க்கை முறை காரணமாகவும், முடி உதிர்தல் மற்றும் முடி பிளவு பிரச்சனை காணப்படுகிறது. முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த பலர்  சந்தையில் கிடைக்கும் இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனால், பணம் செலவழிகிறதே தவிர தீர்வு எதுவும் கிடைப்பதில்லை.

மிகவும் பிரபலமான ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி, உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க  பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன எனக் கூறி அதனை விளக்கியுள்ளார். 

முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய சிகிச்சை வழிகள் : 

1. கற்றாழை  (Aloe Vera)

கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் ஊற விடவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கழுவவும். இது உங்கள் பாதிக்கப்பட்ட முடியை சரிசெய்வது மட்டுமல்லாமல், உலர்ந்த முடியை பட்டு போன்று, மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.

ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!

2. பிருங்கராஜ் (Bhringraj)

பிருங்ராஜ் தலை  முடிக்கு ஒரு சஞ்சீவினியாக செயல்படுகிறது. இதனை பயன்படுத்துவதால், முடி உதிர்தல், பொடுகு ஆகிய பிரச்சனைகள் தீருவதோடு, முடி நரைப்பதையும் குறைக்கிறது. 

3.  நெல்லிகாய் ( Amla)

நெல்லிக்காயில் உள்ள கூறுகள் மற்றும் அதன் தன்மை முடியை மென்மையாக்குவதோடு, பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகிறது. நெல்லிக்காயை பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவினால், முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.அழகான அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்

4. தேங்காய் எண்ணெய் (Coconut Oil)

முடி பராமரிப்பிற்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்தது. நீங்கள் தேங்காய எண்ணெய் தவிர தேங்காய் கொப்பரையை அரைத்தும் தடவலாம். தேங்காய் எண்ணெய் எல்லா வலையிலும், முடியை வலுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News