கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

Foods That Are Good For Liver: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 15, 2022, 07:29 AM IST
  • கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்
  • இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் title=

Healthy Liver Food: கல்லீரல் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உடலில் உள்ள வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் ஆகியவற்றின் சேமிப்புக்காக கல்லீரல் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி உடலை நச்சு நீக்கும் பணியை கல்லீரல் செய்கிறது. இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

எனவே, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்லீரலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகள்

பூண்டு

பூண்டு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, பூண்டை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஏனெனில் கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்க பூண்டு உதவுகிறது. பூண்டை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும், அதே நேரத்தில் பூண்டை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | Weight Loss Tips: 10 நாட்களில் 5 கிலோ எடை குறைக்கலாம், இதை மட்டும் செஞ்சா போதும்!! 

கேரட் 

கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது தவிர, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கேரட்டை பல வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை சூப், சாலட் மற்றும் ஜூஸ் வடிவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கேரட் சாப்பிடுவது உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது.

தர்பூசணி

தர்பூசணி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் காரணமாக, அதன் நுகர்வு மூலம் உடல் நீரேற்றமாக இருக்கும். உடலின் நச்சுகள் வெளியேறுகின்றன. கல்லீரலை நச்சுத்தன்மையில் இருந்து விடுபட உதவுகிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News