நமக்கே தெரியாமல் நம்மை கொல்லும் நோய்., அதிர்ச்சியூட்டும் உண்மை.

நடிகர் விவேக் உட்பட பலரின் உயிரை சைலண்டாக பறித்த எமன் இந்த சைலண்ட் கில்லர். இதை கண்டறிவது எப்படி சிகிச்சை என்ன?

Written by - Dayana Rosilin | Last Updated : Jul 1, 2022, 03:25 PM IST
  • நடிகர் விவேக் மரணத்திற்கு இதுதான் காரணம்
  • சைலண்டாக வந்து உயிரை கொல்லும் எமன்
  • பெண்களை அதிகம் பாதிப்பதாக மருத்துவர்கள் தகவல்
நமக்கே தெரியாமல் நம்மை கொல்லும் நோய்., அதிர்ச்சியூட்டும் உண்மை. title=

உயிரை கொல்லும் சைலண்ட் கில்லர்

உலக அளவில் ஆண், பெண், பெரியவர் சிறியவர் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் ஒரேபோல் தாக்கும் நோயாக மாறியுள்ளது மாரடைப்பு. நன்றாக சாப்பிட்டு, பேசி சிரித்துக்கொண்டு இருந்த மனிதர் சட்டென இறந்து விட்டார் என பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம். கேட்டால் ஹார்ட் அட்டாக் என சொல்வார்கள் மருத்துவர்கள்.

அப்போது நமக்குள் வரும் கேள்வி என்னவாக இருக்கும், இதயத்தில் அடைப்பு இருந்திருந்தால் முன் கூட்டியே அறிகுறிகள் தெரிந்திருக்குமே மருத்துவரை அனுகி சிகிச்சை  பெற்றிருக்கலாமே என்றெல்லாம். ஆனால் அதற்கெல்லாம் நேரம் கொடுக்காத வகையில் வந்த உடனே சைலண்டாக இருந்து உயிரை பறித்து விட்டு செல்லும் எமனாக உள்ளது சைலண்ட் கில்லர் எனும் இருதய அடைப்பு.

மேலும் படிக்க | Weight Loss: உடல் எடையை குறைக்க ட்ரை ஃப்ரூட் டயட்

Heart Attack

நடிகர் விவேக் மரணத்திற்கு இதுதான் காரணம்..

இந்த வகையான ஹார்ட் அட்டாக் ஆண்களை விட பெண்களையே அதிகமாக பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நடிகர் விவேக் இந்த சைலண்ட் கில்லர் வகை இதய அடைப்பால்தான் உயிரிழந்தார். பலரும் அப்போது கேட்டிருப்போம் அவர் ஒரு நடிகர் பணம் காசுக்கு கவலை இல்லை ஏராளமான மருத்துவர்கள் தெரிந்திருப்பார்கள் இருந்தும் ஏன் அவர் முறையான சிகிச்சை எடுக்கவில்லை என புலம்பல்கள் இருந்தது.

ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் தனது இதயத்தில் அடைப்பு இருக்கிறது என்பது அவருக்கே தெரிந்திருக்க வாய்பில்லை. காரணம் இந்த சைலண்ட் கில்லர் இதயத்தில் அடைப்பு ஏற்படுத்தியதற்கான எந்த அறிகுறியும் முன்கூட்டி தெரிவதில்லை. அதனால் உயிரிழப்பு என்பது தவிற்க முடியாத ஒன்றாக மாறி விடுகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சைலண்ட் கில்லரின் அட்டெக் அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிகிச்சையும், தீர்வும் என்ன?

சரி இதற்கு என்னதான் தீர்வு என கேட்கலாம், சீரான உணவு, புகை மற்றும் மது பழக்கத்தை நிறுத்துதல், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், தினசரி உடற்பயிற்சி, ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளுடன் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், சரியான எடையை பராமரித்தல் மற்றும் வழக்கமான இதய பரிசோதனைகளை செய்தல் உள்ளிட்டவற்றின் மூலம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்

அதே நேரத்தில் எந்த அசாதாரண அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள். மேலும், இதயம் அடைப்பு ஏற்பட்டுள்ளதையும் அது எத்தனை சதவீதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் சாதாரண எக்கோ மற்றும் ஈ.சி.ஜி மூலம் அறிய முடியுமா? என கேட்டால் இருக்கிறது என்பதை மட்டுமே அறிய முடியும் அது எத்தனை சதவீதம் என்பதை ஆஞ்சையோ ஒன்று மட்டும்தான் தெளிவுபடுத்தும்.

மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News