ஆச்சரியம் ஆனால் உண்மை! சதை உண்ணும் பாக்டீரியாவிலிருந்து தப்பிய உலகின் முதல் பெண்

Medical Advancement: மோசமான பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண், ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சையால் உயிர் பிழைத்த அதிசயம்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 1, 2023, 09:21 PM IST
  • சதை உண்ணி பாக்டீரியா
  • ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை
  • நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை
ஆச்சரியம் ஆனால் உண்மை! சதை உண்ணும் பாக்டீரியாவிலிருந்து தப்பிய உலகின் முதல் பெண் title=

கான்பெர்ரா: செம்மறி ஆடு மற்றும் மாடுகளில் கருங்காலி நோயை ஏற்படுத்தக் கூடிய நோய்க்கிருமியால் ஏற்படும் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்த முதல் நபர் என்ற ஆச்சரியமான சாதனையை ஆஸ்திரேலிய பெண் ஒருவர் ஏற்படுத்தியிருக்கிறார்.  
பொதுவாக ஆடு மற்றும் மாடுகளில் கொடிய "கருப்பு கால்" நோயை (blackleg disease) உண்டாக்கும் நோய்க்கிருமியிலிருந்து உயிர் பிழைத்த உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட நபர் இந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் மோசமான பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பெண் உயிர் பிழைத்துவிட்டதாக, இந்த வாரம் வெளியான ஆஸ்திரேலியாவின் மருத்துவ இதழில் செய்தி வெளியானது. இது மனிதர்களில் இதுவரை நிகழ்ந்த இரண்டு ஒத்த நிகழ்வுகளுக்குப் பிறகு நோய்க்கிருமியின் வெற்றிகரமான சிகிச்சையாகும். இதற்கு முன்னர், இதே நோய் ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலும் பாதித்தபோது, பாக்டீரியா பாதித்தவர்களின் மரணம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பெண்ணின் வயது 48. அந்தப் பெண்ணுக்கு அதிக இரத்த அழுத்தம் இருந்தது.  சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட பல உறுப்புகள் செயலிழந்த நிலையில், இருந்தபோது கடந்த ஆண்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி என பல பிரச்சனைகள் இருந்தன. இரத்தக் கலாச்சாரப் பரிசோதனையை மேற்கொண்ட பிறகு,  இரத்தத்தில் உள்ள பாக்டீரியம் தான் இதுவரை கேள்விப்பட்டிராத மற்றும் க்ளோஸ்ட்ரிடியம் சாவோயி (Clostridium chauvoei) என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரியாவே பிரச்சனைக்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க | நிபா அபாயம் குறைந்துள்ளது, இன்னும் தீரவில்லை.. இரண்டாவது அலை வரலாம்: கேரள முதல்வர்

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது பற்றி சரியாக தெரியாவிடாலும், கால்நடை மருத்துவத்தில் இது ஆடுகள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் ககருங்காலி நோய்க்கு முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது. இந்த பாக்டீரியா இரத்த ஓட்டத்தில் நுழைந்து 'சதை உண்ணும்' வேலையை செய்யும் சதை உண்ணியாக மாறும். இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களுக்குள் நுழைந்தால், அது மயோனெக்ரோசிஸ் என்ற நோயை ஏற்படுத்தும். இது மனிதக்ரளின் கால்களில் உள்ள தசைகளை அழித்துவிடும்.

நோய்க்கிருமி பாதிக்கப்பட்டவரின் உடலில் நுண்ணுயிர் நுண்குழாய் அழற்சியை ஏற்படுத்தும் நச்சுகளை உருவாக்கும் என்றும், இதன் காரணமாக குடல் திசுக்களின் பகுதிகள் இறந்துவிடுகின்றன என்பதால், இந்த நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை "சதை உண்ணி" என்று அழைக்கலாம்.

மெல்போர்ன் பல்கலைகழகத்தின் கால்நடை நிபுணர் பேராசிரியர் டேவிட் பெக்ஸ் கூறும் விஷயம் இது. “பொதுவாக இளம் கன்றுகளின் கால் ஊனப்படுவதற்கு, இந்த பாக்டீரியாக்களின் பாதிப்பு காரணமாக இருக்கும். இந்த பாக்டீரியாக்கள், சதையை தின்றுவிட்டு, அங்கு வாயுவை உற்பத்தி செய்ய வைக்கின்றன”.

பாக்டீரியாவால் சிதைக்கப்பட்ட இறந்த திசுக்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து இரத்தத்தை நச்சாக்குகின்றன. இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண், ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்திருப்பது நிம்மதியைத் தந்துள்ளது.

மேலும் படிக்க | மிரட்டும் நிபா வைரஸ்.. பீதியில் மக்கள்: மேலும் ஒருவர் பாதிப்பு, கேரளாவில் ஹை அலர்ட்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News