வெயில் காலத்தில் தயிர் நல்லதா? மோர் நல்லதா? மருத்துவர்களின் தேர்வு என்ன?

Butter Milk Vs Curd: சம்மர் வந்தாச்சு, குடை-குளிர் கண்ணாடியெல்லாம் ரெடியா? இந்த வெயில் காலத்தில் உடலுக்கு நல்லது தயிரா? மோரா? இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Mar 13, 2024, 03:55 PM IST
  • மோர் Vs தயிர்-இரண்டில் எது நல்லது?
  • எது உடல் சூட்டை தணிக்க உதவும்?
  • மருத்துவர்கள் கூறுவது என்ன?
வெயில் காலத்தில் தயிர் நல்லதா? மோர் நல்லதா? மருத்துவர்களின் தேர்வு என்ன? title=

Butter Milk Vs Curd Which One Reduces Body Heat? கத்திரி வெயில் காலம் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளது. ஆனால், கடும் வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர், இப்போதே தமிழகத்தில் வெயிலின் சூட்டினை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நமது கால நிலை மாற்றித்திற்கு ஏற்ப, நமது உடல் ஆரோக்கியத்திலும் மாற்றம் ஏற்படும் என்பதில் துளியும் ஐயமில்லை. இப்படி, சூட்டினால் உஷ்ணமாகும் உடலை சில உணவுகளை வைத்துதான் குளுமை படுத்த முடியும். அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் தயிர். இந்த வெயில் காலத்திற்கு தயிர் சாப்பிடுவதா? மோர் குடிப்பதா? என பலருக்கு சந்தேகம் உள்ளது. இதில் எது சிறந்தது? மருத்துவர்கள் கூறவது என்ன? இங்கு பார்ப்போம். 

தயிர் Vs மோர்:

தயிர், மோர் என பால் சம்பந்தப்பட்ட உணவுகளை பெரும்பாலான இந்தியர்கள் தங்களது இல்லங்களில் உபயோகிக்கின்றனர். தயிர், நமது உடலை குளுமைப்படுத்தும் உணவு பொருட்களுள் ஒன்றாகும். ஆயுர்வேதத்தின் படி, தயிரை விட மோர்தான் உணவை செரிமானம் செய்வதற்கு எளிதாக உபயோகப்படுவதாக கூறப்படுகிறது. தயிர், தடிமனான உணவு பொருளாக உள்ளதால், மோர் உடன் ஒப்பிடும் போது சரிமானம் ஆக சில மணி நேரம் அதிகமாக ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இரண்டிலும் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

தயிரை உட்கொள்ளும்போது, ​​அது வயிற்றில் இருக்கும் வெப்பத்துடன் தொடர்பு கொண்டு, உணவு செரிமானம் ஆகும் செயல்முறையை தீவிரமாக்குகிறது. இதனால் உடலின் வெப்பம் குறைவதற்கு பதிலாக சமயங்களில் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மோர் குடிக்கும்போது இந்த பிரச்சனை ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள்.  

மேலும் படிக்க | உயர் கொலஸ்ட்ராலை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும்

செரிமான கோளாறை சீர் செய்யும்:

தயிர்-மோர் இரண்டுமே சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக உதவும். மோரில் ப்ரோபையோட்டிக், வைட்டமின் சத்துகள், மினரல் சத்துகள் ஆகியவை அதிகமாக உள்ளன. இதனால் எந்த வெப்ப நிலையிலும் உங்கள் உடலை பெரிதாக வெப்பமடைவதை தடுக்கிறது. அதனால், வெயில் காலத்தில் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள். செரிமான செயல்பாடு அதிகரிக்க, சீரக தூள், இஞ்சி, கொத்தமல்லி போன்ற மசாலாப் பொருட்களை மோரில் சேர்க்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும்..

மோரில் உள்ள மருத்துவ நன்மைகள் குறித்து பேசும் மருத்துவர்கள், தயிர் உடல் எடை அதிகரிப்புக்கு உதவுவதாகவும், அதே நேரத்தில் மோர் உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதாகவும் தெரிவிக்கின்றனர். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவோர், கண்டிப்பாக அவர்களின் டயட்டில் மோரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 

இலகுவான உணர்வு:

தயிரில் உள்ள ஆற்றல், உடலின் சூட்டை அதிகரிக்க உதவுவதாகவும், அதே நேரத்தில் மோர் உடல் சூட்டை தணிக்க உதவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மோர் செய்ய, பல்வேறு செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் நீரும் சேர்க்கப்படுகிறது. அதனால், வெயில் காலத்தின் போது தயிர் உடன் ஒப்பிடுகையில் மோரில் அதிக நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

பிற நலன்கள்:

>மோர், காரமான உணவுக்குப் பிறகு வயிறு எரிச்சலடைவதை தடுக்கிறது
>சாப்பிட்ட உணவில் இருக்கும் கொழுப்பை ஒழிக்க, மோர் குடிக்கலாம்.
>பால் சம்பந்தப்பட்ட உணவுகளினால் அலர்ஜி இருப்பவர்கள் கூட மோர் குடிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
>செரிமானம் மட்டுமன்றி, வயிறு சம்பந்தப்பட்ட பிற உடல் நலக்கோளாறுகளை நீக்கவும் மோர் உதவுகிறது. 

மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? அப்பாே ‘இந்த’ பருப்பை சாப்பிடுங்கள்..!

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News