இந்த வேகமான உலகத்தில் பலரும் ஃபாஸ்ட் புட் போன்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை உண்டு உடல் பருமனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி ஒவ்வொருவரும் உடல் எடையை குறைத்து வருகின்றனர், ஆனால் அவர்கள் இழந்த எடையை சிறிது நாட்கள் தான் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது. குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் உடல் எடையை குறைத்தவர்களுக்கு மீண்டும் பழையபடி உடல் எடை ஏறிவிடுகிறது. அவர்களால் சரியான முறையில் உடல் எடையை தக்கவைத்து கொள்ளமுடியாமல் போய்விடுகிறது. நாம் அன்றாடம் சில வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் உடல் எடை ஏறிவிடாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க | சூப்பர் காய் சுரைக்காய்: சம்மரை கூலாய் கழிக்க சூப்பரா உதவும் சுரைக்காய்
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், உடல் எடையை இழந்தவர்களும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க எண்ணுபவர்களும் தினமும் சில வழிகளை கடைபிடிக்க வேண்டும், அவ்வாறு செய்தால் தான் உடல் சரியான அளவில் அப்படியே இருக்கும். மேலும் உடல் எடையை குறைப்பது எவ்வளவு முக்கியமானதோ அதை விட முக்கியமானது மீண்டும் உடல் எடை ஏறிவிடாமல் பார்த்துக்கொள்வது. அதனால் உடல் எடையை சரியான முறையில் பராமரிப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட மூன்று வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கலாம்.
1) தினசரி 7000 முதல் 8000 ஸ்டெப்ஸ் நீங்கள் நடக்க வேண்டும், அவ்வாறு தினமும் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது உங்கள் உடலில் அழகிய வடிவத்தை பெறும்.
2) உடற்பயிற்சி செய்வதை தினமும் சுழற்சி முறையில் செய்துவர வேண்டும், கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் நான்கு நாட்களுக்கு நீங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும்.
3) மேலும் முறையனா உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். தினமும் உணவில் 80% ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், 20% உங்களுக்கு தேவைப்படும் ஜங்க் ஃபுட்ஸ்களை உண்ணலாம், இருப்பினும் கூடுமானவரை ஆரோக்கியமான உணவுகளையே உண்ணுங்கள்.
மேலும் படிக்க | கோடையில் தலைவலியாக உள்ள தலைவலி.. என்ன செய்யலாம்.?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR