இறைச்சியை பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் நபரா நீங்கள்? ஜாக்கிரதை!!

Frozen Meat Side Effects: சில உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து சூடுபடுத்தி உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் இறைச்சியை வைத்திருந்தால், பல தீமைகள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 5, 2022, 02:47 PM IST
  • குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை வைத்துக்கொண்டு பயன்படுத்தலாமா?
  • எத்தனை நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைக்கலாம்?
  • சமைக்காத இறைச்சியை ஒருபோதும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.
இறைச்சியை பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் நபரா நீங்கள்? ஜாக்கிரதை!! title=

Frozen Meat Side Effects: இந்த உலகம் வேகமாக இயங்கும் ஒரு உலகம். நாம் வாழும் வாழ்க்கை இயந்திரத்தனமான ஒரு வாழ்க்கையாக மாறி வருகிறது. இங்கு அனைத்து விஷயங்களும் மிகவும் துரிதமாக நடக்க வேண்டும். சமையலும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்போதெல்லாம், நாம் தினமும் சமைக்கக்கூட நமக்கு நேரம் இருப்பதில்லை. முதல் நாள் செய்த உணவையே குளிர்சாதன பெட்டியில் வைத்து அதை சூடாக்கி உண்ணும் நிலை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், வெளியிருந்தும் பல உணவுப்பொருட்களை வாங்கி வருகிறோம். ஒரே நேரத்தில் தேவையான பொருட்களை வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் சேகரித்து வைத்துவிட்டால் சில நாட்களுக்கு அதை பயன்படுத்தலாம். இது அனைவருக்கும் மிக எளிய வழியாக உள்ளது.

எனினும், குளிர்சாதன பெட்டிகளில் உணவை வைப்பது தொடர்பான பல சந்தேகங்களும் நமக்கு உள்ளன:

- குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை வைத்துக்கொண்டு பயன்படுத்தலாமா? 

- எத்தனை நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைக்கலாம்? 

- குளிர்சாதன பெட்டியில் இருக்கும் குளிரூட்டப்பட்ட உணவு உடலுக்கு ஆரோக்கியமானதா? 

- அதுவும் குறிப்பாக குளிர்சாதன பெட்டியில் இருக்கும் இறைச்சியை சாப்பிடலாமா? 

மேலும் படிக்க | Flaxseed: அளவிற்கு அதிகமான ஆளி விதை பேராபத்து! எச்சரிக்கும் நிபுணர்கள் 

சில உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து சூடுபடுத்தி உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் இறைச்சியை வைத்திருந்தால், பல தீமைகள் ஏற்படும். குளிர்சாத பெட்டியில் இறைச்சியை வைப்பதால் வரும் தீமைகள் பற்றியும், அதை வைக்க வேண்டிய முறைகள் பற்றிடும் இந்த பதிவில் காணலாம். 

- குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் சில உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

- நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் இறைச்சியில் பாக்டீரியா உருவாகிவிடும். அதை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை நோய் உங்களை தாக்கலாம்.

- குளிர்சாதன பெட்டியின் மிகக் குறைந்த மற்றும் குளிரான பகுதியில் இறைச்சியை வைக்கவும். 

- மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் மற்ற உணவுப் பொருட்களிலிருந்து இறைச்சியை விலகி வைக்க வேண்டும். 

- சமைத்த இறைச்சி மற்றும் சமைக்காத இறைச்சி இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும். 

- ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து சமைத்த பிறகு, அதை அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதை சாப்பிட்டு விட வேண்டும்.

- இறைச்சியை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு உணவு விஷமாக மாறக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது. 

- பல நாட்கள் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் சுவை மற்றும் புரத சத்துக்கள் குறையும்.

- சமைக்காத இறைச்சியை ஒருபோதும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. 

- சமைத்த இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். 

- சமைத்த இறைச்சி சூடாக இருக்கும்போது அப்படியே அதை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. 

- குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வைக்கக்கூடாது. 

மேலும் படிக்க | உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் காலில் தோன்றும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News