எச்சரிக்கை... இந்த பிரச்சனை இருந்தால் வாழைப்பழத்தை அளவோடு சாப்பிடுங்க

Side Effects of Banana: ஆண்டு முழுவதும் கிடைக்கும் மிக எளிமையான பழமான வாழைப்பழம், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டிருந்தாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், வாழைப்பழைத்தை சாப்பிடுவது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2024, 03:07 PM IST
  • வாழைப்பழத்தை சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
  • உடலில் வாதம் நிலை பாதிக்கப்பட்டால் சுமார் 80 வகையான நோய்களை ஏற்படுத்துகிறது
  • வாழைப்பழம் வாத பித்த தோஷத்தை சமன் செய்கிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை... இந்த பிரச்சனை இருந்தால் வாழைப்பழத்தை அளவோடு சாப்பிடுங்க title=

வாழைப்பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, , வைட்டமின் பி6, பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றுடன் குளுதாதயோன், டெல்பிடின், பீனாலிக்ஸ், ருடின் மற்றும் நரிங்கின் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  நிறைந்துள்ள என உள்ளன ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். வாழைப்பழம் வாத பித்த தோஷத்தை சமன் செய்கிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

உடலில் வாதம் நிலை பாதிக்கப்பட்டால் சுமார் 80 வகையான நோய்களை ஏற்படுத்துகிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால், உடலில் வறட்சி, கூச்ச உணர்வு, எலும்புகள் பாதிப்பு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் ஆரம்பிக்கும். எனினும், சகுறிப்பிட்ட சில பிரச்சனைகள் இருந்தால், வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும் அல்லது வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.

வாழைப்பழத்தை  சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

ஆரோக்கியமான சிறந்த பழங்களில்  வாழைப்பழம் முதலிடம் வகிக்கிறது. ஆண்டு முழுவதும் கிடைக்கும் மிக எளிமையான பழமான வாழைப்பழம், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டிருந்தாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், வாழைப்பழைத்தை சாப்பிடுவது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்த விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை இருந்தால் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது. அதிலும், காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் அசிடிட்டி அல்லது வாயுத்தொல்லை அதிகரிக்கும். வாழைப்பழம் நார்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டின் வளமான மூலமாகும். நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் செரிமானத்திற்கு சிறந்தது என்றாலும், செரிமான பிரச்சனை இருக்கும் போது அளவிற்கு அதிகமான நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் வாந்தி, வயிற்று வலி மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படலாம். 

உடல் பருமன்

வாழைப்பழத்தை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது உடல் பருமனை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலுக்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் கிடைக்கின்றன, இதனால் உடல் எடை அதிகரிக்கும். 

நீரிழிவு

மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில், வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு மிக அதிகம். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழங்களை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க |  மூளையும் உடலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க... தினம் காலையில் நெல்லிக்காய் ஜூஸ்

சிறுநீரக நோய்

சிறுநீரக பிரச்சனை அல்லது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழங்களை அளவிற்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தை பாதிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்

வாழைப்பழத்தை சாப்பிட ஏற்ற நேரம் எது?

வாழைப்பழத்தை மதியம் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் சோம்பலாக உணரும் நேரத்தில், வாழைப்பழம் உடனடி ஆற்றலைக் கொடுக்கும். மேலும் உங்களூக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தெரும். அதே போன்று மாலை அல்லது இரவில் மிகவும் தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். வாழைப்பழத்தை குறைந்த அளவில் சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | முருங்கை இலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்க... உடம்பு தெம்பாகும் - இந்த 4 நன்மைகள் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News