புதுடெல்லி: உணவு இல்லாமல் யாரும் உயிர் வாழ முடியாது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை, பணத் தட்டுப்பாடு, விவசாயம் பாதிப்பு என பல காரணிகளால் உணவுபொருட்கள் கிடைப்பது அரிதாகிவிடுமோ என்ற அச்சங்களுக்கு மத்தியில் பலர் உணவு இல்லாமல் இறப்பது கவலை தரும் விஷயம் என்று சொல்கிறோம். அதுமட்டுமல்ல, ஏழை நாடுகளில் பலர் இரு வேளை கூட திருப்தியாக உண்ண முடிவதில்லை என்ற நிலையும் உள்ளது. ஆனால், உணவை வீணடிப்பது என்ற விஷயத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதை நிரூபிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் உணவு வீணடிக்கும் போக்கு இருந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்தியர், 50 கிலோ உணவை வீணாக்குகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? புள்ளிவிவரங்கள் ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் அளிக்கிறது.
மேலும் படிக்க | அளவுக்கு மிஞ்சினால் வைட்டமின் பி கேன்சரை உருவாக்கும்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நபருக்கு 50 கிலோ என்ற அளவில் உணவு வீணடிக்கப்படுகிறது. இது உணவை வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறது என்பது மிகவும் எதிர்மறையான விஷயம். உணவு விரயம் விவகாரத்தில் உலக நாடுகளின் நிலை என்ன என்பதையும், இப்படி விரயமாகும் உணவுகளை சேமிப்பதன் மூலம் என்ன செய்ய முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஐக்கிய நாடுகளின் உணவுக் கழிவுக் குறியீட்டு அறிக்கை 2021 இன் படி, இந்தியாவில் வீணாகும் உணவில் 61 சதவீதம் நமது சமையலறையிலே நடைபெறுகிறது என்பது அதிர்ச்சியளிக்கலாம்.
மும்பையில் தினமும் 69 லட்சம் கிலோ உணவுப் பொருட்கள் உண்ணாமல் தூக்கி எறியப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உணவை வீணாக்கமல் தவிர்த்தால், மும்பை மக்களில் பாதிப் பேரின் பசி ஆறும். அதாவது தினசரி தேவைக்கு அதிகமாக தயாரிக்கப்படும் உணவுகளின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது.
மேலும் படிக்க | வைட்டமின் பி 12 மிக அதிக அளவில் இருக்கும் உணவுகள் எவை
உணவை வீணடிப்பதன் தாக்கம், தார்மீக ரீதியில் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது. மற்றொரு அறிக்கையின்படி, 33 சதவீத பசுமை இல்ல வாயுக்களுக்கு தவறான உணவுச் சங்கிலியே காரணம் என்று தெரியவந்துள்ளது.
உணவை வீணாக்குவதில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 91 மில்லியன் டன் உணவு விரயம் ஆகிறது. அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், மக்கள்தொகை எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவும், இரண்டாம் இடத்தில் இருக்கும் சீனாவும் பணக்கார நாடுகள் இல்லை என்பதும், இந்த இரு நாடுகளிலும் பலர் தினசரி பசியுடனே தூங்கச் செல்கிறார்கள் என்பதாகும்.
மேலும் படிக்க | உணவுகளில் உள்ள 5 இரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்
அதாவது மக்கள்தொகை எண்ணிக்கைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நாடுகளே, உணவை வீணாக்கும் பட்டியலிலும் அதே வரிசையில் இடம் பிடித்துள்ளன.
கலாச்சார பாரம்பரியம் உள்ள இந்தியா மற்றும் சீனாவில் விருந்தோம்பலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் உணவு விரயத்தில் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். அதிக உணவு பொருட்களை சமைப்பது, பல வகை உணவுகளை ஒரே நேரத்திற்கு சமைப்பது என்பது போன்ற விஷயங்களும், உணவு விரயத்திற்கு காரணமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
ஆனால், சமையலறை என்பது வீட்டு சமையலறையை மட்டும் குறிப்பிடுவது இல்லை. உணவு விடுதிகள், விழாக்கள், சடங்குகள், திருமணங்கள், பண்டிகைகள் என முக்கிய சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படும் உணவு அதிக அளவில் வீணாவதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. இவற்றைத் தவிர, விவசாய பொருட்களை கொண்டு செல்வது, பொருட்கள் அழுகிப் போவது, விரயமாவது என பல வழிகளில் விரயமாகும் உணவுப் பொருட்கள், மக்களின் வயிற்றுக்கு சென்றால் பட்டினிச்சாவு என்ற வார்த்தையே வீணாகிவிடும்.
மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடு இருக்கா? சைவ உணவுக்காரர்களுக்கான அற்புதமான வழி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ