சாவை தடுக்கும் சாம்பார்... பெருங்குடல் புற்றுநோய் வராது - வாயைப் பிளக்கும் வெளிநாட்டினர்!

நாம் அன்றாடம் உண்ணும் ஒரு உணவு நம்மை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறது என்று சொன்னால் நம்ப முடியுமா... அப்படிதான், நாம் தினமும் உண்ணும் சாம்பார் குறித்து அமெரிக்க மருத்துவர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 3, 2023, 01:17 PM IST
  • உலகெங்கும் பெருங்குடல் புற்றுநோய் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
  • நொறுக்குத்தீனியை அதிகம் உட்கொள்வது இது ஏற்படும் காரணங்களில் ஒன்று.
  • எலிக்கு சாம்பார் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சாவை தடுக்கும் சாம்பார்... பெருங்குடல் புற்றுநோய் வராது - வாயைப் பிளக்கும் வெளிநாட்டினர்! title=

தென்னிந்தியாவில் தோசை, இட்லி போன்ற உணவுகளுடன் பலராலும் விரும்பி சாப்பிடுவது, சாம்பார். மிகவும் பரவலாக காணப்படும் சாம்பார் பருப்பு, காய்கறிகள், சீரகம், கருப்பு மிளகு, வெந்தயம், புளி தண்ணீர் மசாலா பொருட்களின் மூலம் தயாரிக்கப்படுகிறது. 

துவர்ப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் வரும் இந்த சாம்பார், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஆசிய நாடுகளின் உணவு வகைகளில் இடம்பெறுகிறது. புற்றுநோயின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துள்ள ஒரு நேரத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை பெருமளவில் குறைக்கும் சாம்பாருக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள் மருத்துவம், இரைப்பை குடல் மற்றும் தொற்றுநோயியல் நிபுணரான, மருத்துவர், பழனியப்பன் மாணிக்கம் என்பவர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில் சாம்பாரை எலிகளுக்கு கொடுத்து அதன்மூலம் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வு குறித்து பேசினார். ஆய்வில் இரண்டு குழுக்களாக எலிகள் பிரிக்கப்பட்டன.

மேலும் படிக்க | தொப்பை குறைய படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்க

அதில், ஒரு பிரிவுக்கு தண்ணீரும், மற்றொரு பிரிவு எலிகளுக்கு சாம்பாரும் வழங்கப்பட்டது. இரு குழுக்களுக்கும் DMH (dimethylhydrazine) வழங்கப்பட்டது. விலங்கு மாதிரிகளில் பெருங்குடல் புற்றுநோயைத் தூண்டுவதற்கு DMH பயன்படுத்தப்படுகிறது. 

இந்த காலக்கட்டத்தில், ​​பெரும்பாலான மக்கள் நொறுக்குத் தீனிகளை அதிகம் உட்கொள்வதால் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சாம்பார் உதவிகரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து, மருத்துவர், பழனியப்பன் மாணிக்கம்,"தென்னிந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு சுவையான உணவுகளில் ஒன்று, சாம்பார். இப்போது இது ஒரு வகை பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது. 

சாம்பார் உட்கொள்வதால், டைமெதில் ஹைட்ரேசின் தூண்டப்பட்ட பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த சாம்பாரை மிகவும் ஆரோக்கியமானதாக மாற்றும் மசாலா மற்றும் பருப்புகளின் சரியான கலவையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கொடிய பெருங்குடல் புற்றுநோயானது உலகில் பொதுவாகக் கண்டறியப்பட்ட மூன்றாவது புற்றுநோயாகக் கூறப்படுகிறது. 

இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் பல்வேறு மசாலாப் பொருட்களைக் கொண்ட சைவ உணவின் காரணமாக இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோயின் பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பெருங்குடல் புற்றுநோய்கள், கிட்டத்தட்ட 70 சதவீதம் உணவுடன் தொடர்புடையவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்" என்று இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முடி உதிர்வை தடுக்க இந்த மூலிகைகள் போதும்...எளிய வீட்டு வைத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News