கொலஸ்ட்ராலை கட்டுப்பாடுத்தும் வழிகள்: உடலில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் சேர்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நீண்ட நாட்களுக்கு உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்துகொண்டே இருந்தால், அது, இதயம் தொடர்பான பல நோய்களுக்கு காரணமாகிவிடும். ஏனெனில் உடலில் கொலஸ்ட்ரால் சேர்ந்தவுடன், நரம்புகள் சுருங்க ஆரம்பித்து இரத்த ஓட்டத்தில் சிக்கல் ஏற்படுகிறது. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கவும், பல நோய்களைத் தவிர்க்கவும் விரும்பினால், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது மிக அவசியமாகிறது.
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமாகும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நாம் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற சரியான புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும். சில உணவுகளை நமது தினசரி டயட்டில் சேர்த்தால் கொலஸ்ட்ராலை எளிதாக கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உலர் திராட்சையின் நன்மைகள்
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை ஒன்றாகப் பெற விரும்பினால், தினமும் உலர் திராட்சையை உட்கொள்ளத் தொடங்க வேண்டும். இதில் கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இதன் காரணமாக ட்ரைகிளிசரைட்டின் அளவு குறைகிறது. இது தவிர, இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.
வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்
வெந்தயத்தில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன. இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கவும் உதவுகிறது. ஃபோலிக் அமிலம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இரத்த ஓட்டத்தை குணப்படுத்த இது சிறந்ததாக கருதப்படுகிறது. இது தவிர, இரும்பு, கால்சியம் மற்றும் தாமிரம் போன்ற பல வகையான தாதுக்களும் இதில் காணப்படுகின்றன.
மேலும் படிக்க | Wheatgrass: இரத்த அழுத்தத்தை ஓட விரட்டும் கோதுமை புல் ஜூஸ்!
பாதாம் கொட்டை
வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பாதாமில் உள்ளன. இது தவிர, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது.
ஆளி விதைகள் பயனுள்ளதாக இருக்கும்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை பெற ஆளி விதைகளை உட்கொள்ளலாம். இது தவிர, இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
சூரியகாந்தி விதைகள் பயனுள்ளதாக இருக்கும்
சூரியகாந்தி எண்ணெய் மட்டுமல்ல, அதன் விதைகளிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கொழுப்பின் அளவைக் குறைக்க சோயாபீன் எண்ணெய்க்குப் பதிலாக சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு தேவையான பழங்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் மாதுளை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ