அதிக கொலஸ்ட்ராலுக்கு பாகற்காய் டீ: அதிக கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, மூன்று நாள நோய் (ட்ரிப்பிள் வெசல் டிசீஸ்) மற்றும் கரோனரி தமனி நோய் (கரோனரி வெசல் டிசீஸ்) போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு பலருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாக உள்ளது.
நாம் கொலஸ்ட்ராலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால் பாகற்காய் சாப்பிட்டால் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை எளிதாக குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாகற்காயின் கசப்பு காரணமாக பலர் இதை சாப்பிட விரும்புவதில்லை. எனினும், சிலர் இதை விரும்பி உட்கொள்வதும் உண்டு. இது நம் ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம்.
இது கசப்பான பச்சைக் காய்கறியாகும். இந்த காய் எவ்வளவு சிறப்பாக சமைக்கப்பட்டாலும், இதன் கசப்பை மறைக்க எத்தனை மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும், இதை சாப்பிடுவதற்கு முன்பு நாம் தயங்குகிறோம் என்பதுதான் உண்மையாகும்.
பாகற்காய்: மருந்துகளுக்கு சமமான மருத்துவ அம்சங்கள்
பாகற்காய் சாறு குடிப்பதால் பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இது நமது உடலின் உட்புறத்தை சுத்தம் செய்கிறது. இதன் காரணமாக நாம் பல நோய்களிலிருந்து காப்பாற்றப்படுகிறோம். இது மிகவும் கசப்பாக இருப்பதால், அதை குடிப்பது அனைவருக்கும் எளிதானது அல்ல. நீங்கள் இந்த கசப்புக்காயை வேறு வழியில் பயன்படுத்த விரும்பினால், அதை வைத்து ஒரு அற்புதமான மூலிகை தேநீர் தயார் செய்யலாம். இந்த பானம் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும், அதன் நன்மைகள் மிகப்பெரியவை.
மேலும் படிக்க | முதுகுவலி பாடாய் படுத்துகிறதா... ‘இந்த’ உணவுகளுக்கு 'NO' சொல்லுங்க!!
பாகற்காய் தேநீர் தயாரிப்பது எப்படி?
பாகற்காய் தேநீர் என்பது ஒரு மூலிகை பானமாகும். இது பாகற்காய் அல்லது உலர்ந்த பாகற்காய் துண்டுகளை தண்ணீரில் போட்டு தயார் செய்யப்படுகிறது. இது ஒரு மருத்துவ தேநீராக விற்கப்படுகிறது. பாகற்காய் தேநீர் தூள் அல்லது சாறு வடிவில் கிடைக்கிறது. இது Gohyah Tea என்றும் அழைக்கப்படுகிறது. இதை வீட்டில் எளிதாக தயாரிக்கலாம். பாகற்காய் சாறு போலல்லாமல், பாகக்காய் தேநீர் ஒரே நேரத்தில் அதன் இலைகள், பழங்கள் மற்றும் விதைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றது.
கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருக்கும்
பாகக்காய் தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இதன் உதவியுடன் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இந்த மூலிகை தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காலை எழுந்ததும் எலுமிச்சை, உப்பு கலந்த நீர் குடித்தால்.. இவ்வளவு நன்மைகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ