Red Chilli: மாரடைப்பில் உயிர் காக்கும் சிவப்பு மிளகாய்! எடை இழக்கவும் உதவும்

Health Benefits of Red Chilli: சமையலுக்கு இன்றியமையாத மசாலாப் பொருட்களில் ஒன்றான சிவப்பு மிளகாய்த் தூள் பல விதமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 9, 2022, 06:43 PM IST
  • சிவப்பு மிளகாய் தூள், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • அதன் மருத்துவ பயன்பாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
  • மாரடைப்பு சமயத்தில் பெரிது பலன் தரும் சிவப்பு மிளகாய் தூள்.
Red Chilli: மாரடைப்பில் உயிர் காக்கும்  சிவப்பு மிளகாய்! எடை இழக்கவும்  உதவும் title=

சமையலில்  பல வகையான மசாலாப் பொருட்கள்  பயன்படுத்தப்படுகின்றன.  இந்த மசாலாப் பொருட்களில் சிவப்பு மிளகாய்ப் பொடி தினமும் பயன்படுத்தப்படும் மசாலா என்றால் மிகையில்லை. மிளகாய் உணவிற்கு காரத்தை கொடுக்கிறது. ஆனால் சமைப்பதைத் தவிர, சிவப்பு மிளகாய்ப் பொடியில் ஏராளமான நன்மைகள் உள்ளன. சரியான அளவு மற்றும் சரியான முறையில் பயன்படுத்தினால், சிவப்பு மிளகாய் தூள், ஆரோக்கியத்திற்கு  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் மருத்துவ பயன்பாட்டை ம் பற்றி தெரிந்து கொள்வோம்.

மாரடைப்பு சமயத்தில்  பெரிது பலன் தரும் சிவப்பு மிளகாய் தூள் 

சிவப்பு மிளகாய் தூள் இதயத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே ஒரு டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூளை ஒரு கிளாஸில் கரைத்து சாப்பிட்டால், உடல்நிலை சீராகும் என்று பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. பொட்டாசியம் சிவப்பு மிளகாயில் அதிக அளவில் உள்ளது. இது உங்கள் உடலின் தமனிகளை தளர்த்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க

உடல் எடையை குறைக்கும் சிவப்பு மிளகாய்!

சிவப்பு மிளகாய் தூள் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படலாம். சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின் உங்கள் பசியைக் குறைக்கிறது மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது அதிக கொழுப்பு எரிக்க வழிவகுக்கிறது. உங்கள் உணவில் சிவப்பு மிளகாய்ப் பொடியைப் பயன்படுத்தினால், அதன் தாக்கம் உங்கள் எடையில் தெரிய ஆரம்பிக்கும்.

முடி மற்றும் தோலிலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும்

சிவப்பு மிளகாய் தூளில் வைட்டமின் சி உள்ளது, இது சருமத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது, இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. முடி ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் ஏ அவசியம். இந்த இரண்டு வைட்டமின்ள் அதிக அளவில் இருப்பதால், முடி மற்றும் சருமத்திற்கு சிவப்பு மிளகாய் தூள் மிகவும் நல்லது. இதை உணவில் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடியை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம், மேலும் சருமத்தை சுத்தமாகவும், பருக்கள் இல்லாததாகவும் வைத்துக் கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கதை பொதுவான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News