உடல் எடையை வேகமா குறைக்க... அட்டகாசமான 15 வீட்டு வைத்தியங்கள் இதோ

Home Remedies For Weight Loss: சில இயற்கையான எளிய வழிமுறைகளையும், சில குறிப்பிட்ட வீட்டு வைத்தியங்களையும் பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 7, 2023, 11:20 AM IST
  • பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அவை உங்களுக்கு நிறைந்த உணர்வை அளிக்கின்றன.
  • இதன் மூலம் தேவைப்படாத, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
உடல் எடையை வேகமா குறைக்க... அட்டகாசமான 15 வீட்டு வைத்தியங்கள் இதோ title=

உடல் எடையை குறைக்கும் டிப்ஸ்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.  உடல் பருமன் பல வித உடல் உபாதைகளுக்கு காரணமாக அமைகின்றது.

வாழ்க்கை முறை / உணவுமுறை மாற்றங்கள்

நம்மில் சிலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறோம், கடினமான உணவு கட்டுப்பாடுகளை மேறொள்கிறோம். ஆனால் பலரால் ஜிம் செல்லவோ, டயட்டில் இருக்கவோ முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள், சில இயற்கையான எளிய வழிமுறைகளையும், சில குறிப்பிட்ட வீட்டு வைத்தியங்களையும் பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம். கூடுதல் எடையைக் குறைக்க உதவும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்புக்கான சக்திவாய்ந்த வீட்டு வைத்தியங்கள்: 

வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை கலந்து குடிக்கவும்: ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஃப்ரெஷ்ஷாக எலுமிச்சை சாறை பிழிந்து குடிக்கவும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மிக நல்லது. இது செரிமானத்திற்கு உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. 

கிரீன் டீ: சர்க்கரை நிறைந்த பானங்களை குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீயை உட்கொள்ளலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை அதிக அளவில் கொழுப்பை எரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கரைத்து, உணவுக்கு முன் சாப்பிடுங்கள். இது பசியைக் கட்டுப்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவும்.

கறிவேப்பிலை: தினமும் சில கறிவேப்பிலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுங்கள். இந்த இலைகள் உடல் கொழுப்பை குறைக்க உதவுகின்றன. 

தேன் மற்றும் இலவங்கப்பட்டை: வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை கலந்து காலை அல்லது படுக்கச் செல்லும் முன் குடிக்கவும். இந்த கலவை எடை இழப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

கற்றாழை: கற்றாழை சாறு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, வீக்கத்தை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. தினமும் சிறிய அளவில் இதை உட்கொள்ளவும்.

இஞ்சி: இஞ்சி தேநீர் தயாரித்து குடிக்கலாம். அல்லது உங்கள் உணவில் துருவிய இஞ்சியைச் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் பசியைக் குறைக்கும்.

சோம்பு விதைகள்: உணவுக்குப் பிறகு சோம்பை மென்று சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, அதிக பசியைத் தடுக்கிறது. 

திரிபலா: இந்த ஆயுர்வேத தீர்வு செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இதன் மூலம் எடை இழப்பு முயற்சிகளில் நமக்கு உதவி கிடைக்கின்றது. 

தேங்காய் எண்ணெய்: ரிஃபைண்ட் ஆயில் கொண்டு சமைப்பதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொண்டு சமையல் செய்யத் தொடங்குங்கள். இதில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மிடில் சைக்கிள் ட்ரைகிளிசரைடுகள் உள்ளன.

அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்: பசியைக் கட்டுப்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும், எடை இழப்புக்கு உதவவும் நாள் முழுவதும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்களுக்கு நிறைந்த உணர்வை அளிக்கின்றன. இதன் மூலம் தேவைப்படாத, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | சீயக்காய் தூள் ஒன்று மட்டும் போதும்.. தலை முடி காடு போல வளரும்

அளவான சாப்பாடு: அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க கவனத்துடன் சாப்பிடுவதைப் பயிற்சி செய்யவும். உங்கள் உணவின் அளவை கட்டுப்படுத்தினாலும், நீங்கள் உட்கொள்ளும் உணவில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளதை உறுதி செய்துகொள்ளுங்கள். 

வழக்கமான உடற்பயிற்சி: இருதய செயல்பாடுகள் மற்றும் வலிமை பயிற்சியை உள்ளடக்கிய வழக்கமான உடற்பயிற்சியுடன் இந்த வீட்டு வைத்தியங்களை இணைக்கவும்.

போதுமான தூக்கம் அவசியம்: உடல் எடை குறைய போதுமான தூக்கம் மிக அவசியமாகும். ஏனெனில் இது பசியின்மை மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

விரைவான எடை இழப்பு முயற்சியில் போதுமான எச்சரிக்கை தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்க, சீரான, நிலையான வழிகளில் எடை இழப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். திடீரென்று அதிகமாக உடல் எடை இழக்கப்படுவது ஆபத்தாகலாம். எந்தவொரு புதிய எடை இழப்பு முறையைத் தொடங்குவதற்கு முன்னரும், ஒரு சுகாதார நிபுணரை அணுகவும், குறிப்பாக உங்களுக்கு அடிப்படை உடல்நலப் பிரச்சனை இருந்தால். சீரான உணவு, உடல் செயல்பாடு மற்றும் இந்த வீட்டு வைத்தியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறை சிறந்த பலனைத் தரும்.

(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வயிற்றில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? மிகப்பெரிய பிரச்சனையில் முடியும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News