வெள்ளை முடியைப் போக்க சுரைக்காய்: சில தசாப்தங்களுக்கு முன்பு வரை, முடி நரைப்பது வயது அதிகரிப்பதற்கான அறிகுறியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது 20 முதல் 25 வயதினருக்கும் முடி நரைக்கத் தொடங்குகிறது. அனைவருக்கும் இது ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. இளம் வயதினர் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட கடுமையாக முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் விரும்பிய பலனைப் பெறுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது?
கூந்தலை கருமையாக்க சுரைக்காய் பயன்படுத்தவும்
சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் ஹேர் டைகள் முடியை கருமையாக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் கூந்தலின் மென்மை கெட்டுப்போகும். அதாவது இவற்றால் நன்மையை விட தீமையே அதிகம் இருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இயற்கை மற்றும் ஆயுர்வேத முறைகளை பின்பற்றுவது நல்லது. சுரைக்காய் பயன்பாடு இதற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கருமையான முடியைப் பெற அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் காணலாம்.
1. சுரைக்காய் எண்ணெய் தடவவும்
உங்கள் தலைமுடி இளமையிலேயே நரைக்க ஆரம்பித்து விட்டால், இதற்கு வீட்டிலேயே சுரைக்காய் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தலாம். இதற்கு தேங்காய் எண்ணெய் தேவைப்படும்.
- முதலில் சுரைக்காயை தோலுடன் வெட்டி ஒரு வாரம் வெயிலில் காய வைக்கவும்.
- இப்போது ஒரு வாணலியில் சுமார் 250 கிராம் தேங்காய் எண்ணெயை எடுத்து சூடாக்கவும்.
- பிறகு இந்த சூடான எண்ணெயில் காய்ந்த சுரைக்காய் துண்டுகளை போட்டு கொதிக்கவிடவும்.
மேலும் படிக்க | இந்த ஒரு பழம் போதும், உடல் எடை வேகமா குறையும்
- சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் சமைத்த பிறகு, அடுப்பிலிருந்து எண்ணெயை எடுத்து, அதை குளிர்விக்கவும்.
- இந்த எண்ணெயை தூங்கும் முன் உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்யும் போது தடவி காலையில் கழுவவும்.
- இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், சில நாட்களில் முடி கருப்பாக மாறும்.
2. சுரைக்காய் சாறு குடிக்கவும்
- சுரைக்காயில் நீர்ச்சத்து மிக அதிகமாக உள்ளது.
- மேலும் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன. இது நம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.
- இதன் காரணமாக ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்.
- சுரைக்காய் சாறு உடலுக்கு குளிர்ச்சி தருவது மட்டுமின்றி, வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக மாற்றும்.
- ஆகையால் தினமும் சுரைக்காய் சாற்றை குடிப்பது நன்மை பயக்கும்.
3. சுரைக்காய் தோலைப் பயன்படுத்தவும்
- பூசணிக்காயின் தோலும் உங்கள் தலைமுடிக்கு அதிக பலன்களைத் தரும்.
- இதற்கு முதலில் சுரைக்காய் தோலைத் பிரித்து பிழிந்து சாறு எடுக்கவும்.
- இப்போது இதை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பின்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவவும்.
- இதன் மூலம், உங்கள் தலைமுடி கருப்பாக இருப்பது மட்டுமின்றி, உடைந்து போகாமலும் பாதுகாக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக்க இதை செய்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR