பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு போன்றது. பெண்மையின் முக்கியமான காலகட்டம் என்பது கர்ப்பகாலம் என்றே சொல்லலாம். சிசேரியன் அதிகரித்துள்ள இந்த காலத்தில் சுகப்பிரசவம் என்பது மிகவும் குறைந்து வருகிறது. சுகப்பிரசவம் என்பது எந்த அறுவை சிகிச்சையும் செய்யாமல் சாதாரணமாக பிறப்புறுப்பு மூலம் குழந்தை பெற்றுகொள்வது. சுகப்பிரசவத்தால் பல வித நன்மைகளும் ஏற்படுகின்றன. சுகப்பிரசவம் பாலூட்டலைத் தூண்டுவதுடன் தாய், குழந்தை இருவருக்கும் இது சிறந்ததாக கருதப்படுகின்றது. இருப்பினும், சில சூழ்நிலைகள் காரணமாக குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு சிசேரியன் முறையும் தேவைப்படுகிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்த முறையாக இருந்தாலும் தாய் மற்றும் குழந்தை இருவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.
பெண்கள் கருவுற்ற காலம் முதல் சிறிய விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பிரசவக்காலம் இனிமையாக இருக்கும். சுகப்பிரசவம் ஆவதற்கு சில உணவு முறைகளை பின்பற்றினால் போதும். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகள் மற்றும் பால் போன்ற ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். இந்த பதிவில், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிந்துக்கொள்ளுவோம்.
காய்கறிகள், கீரைகள்:
பாலக்கீரை, மலபார் கீரை, வெந்தய கீரை, முருங்கை கீரை, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, செலரி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் என பல்வேறு வகையான கீரைகளை சாப்பிடவேண்டும். இவை அனைத்திலும் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், இவற்றில் உள்ள வைட்டமின் கே சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல் பெரும்பாலான வைட்டமின் சத்துக்கள் இவற்றில் உள்ளன. இங்கே கொடுக்கப்பட்டுள்ள கீரை வகைகளில் ஏதாவது ஒரு கீரைகளை தினமும் உட்கொள்ளுங்கள்.
பீட்ரூட்
பீட்ரூட் ரோமானிய காலத்திலிருந்து பிரபலமான காய்கறி ஆகும். பீட்ரூட் காய்ச்சல், மலசிக்கல், காயங்கள் மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் பீட்ரூட்டில் கிடைக்கிறது. ஆகவே உடலுக்கு தேவையான சத்துக்களில் பாதி இதிலிருந்து கிடைக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.
தயிர்
தினமும் தயிர் சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு உறுதியான எலும்புகள் உருவாகும். இதில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. பாலை விட தயிரில் தான் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. பால் சாப்பிட்ட பிடிக்காத தாய்மார்களுக்கு தயிர் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். தயிர் குடலில் சீரான நிலையை பராமரிக்கும் உணவாகும்.
மெலும் படிக்க | இளவயதில் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை, நீரிழிவு நோயாக இருக்கலாம்!! https://zeenews.india.com/tamil/health/diabetes-early-symptoms-do-not-ignore-these-are-signs-of-diabetes-at-young-age-diabetes-cure-tips-431868
பழங்கள்
வெவ்வேறு பழங்கள் வெவ்வேறு வகையான வைட்டமின்களை வழங்குகின்றன. மேலும் இவை, கால் பிடிப்புகள், காலை சுகவீனம் போன்ற கர்ப்பத்துடன் தொடர்புடைய பல பிரச்சனைகளை தடுக்கின்றன. பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடம் ஆண்டி ஆக்சிடெண்டுகளின் வளமான ஆதாரங்களும் உள்ளன.
ஆப்பிள் - நார்ச்சத்து அதிகம், மலச்சிக்கல் மற்றும் வீக்கத்துக்கு நிவாரணம் அளிக்கும்.
வாழைப்பழம் - இரத்த அழுத்தத்தை பராமரிக்க தேவையான பொட்டாசியத்திற்கு சிறந்த ஆதாரம்.
முலாம்பழம் - உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களிலிருந்து பாதுகாக்கும். இதில் அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன.
சிட்ரஸ் பழங்கள்- தோல் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கும், கரு மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் தேவையான வைட்டமின் சி இப்பழங்களில் உள்ளன.
நெல்லிக்காய் - உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வைத் தடுக்கிறது. இது நார்ச்சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுக்கிறது. நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்கிறது. நச்சுகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றுகிறது. உடல் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சி ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகிறது. பழத்தில் உள்ள சக்திவாய்ந்த கால்சியம் அளவு உங்கள் எலும்புகளுக்கு போதுமான பலத்தை அளிக்கிறது. மேலும் இது உங்கள் குழந்தைக்கு விரைவாக, வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவுகிறது. நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் கால்கள் மற்றும் கைகளின் வீக்கத்தைத் தடுக்கலாம்.
உலர் பழங்கள்:
உலர் பழங்கள் மற்றும் விதைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் முக்கியமாக ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. உலர் பழங்கள் இரும்புச்சத்து மற்றும் புரதத்தின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ