மூல நோயால் அவதியா? இந்த இரு ஆசனங்கள் மூலம் நிவாரணம் காணலாம்

Piles Treatment: பைல்ஸ் நோய் உள்ளவர்கள் இந்த நோயிலிருந்து விடுபட விரும்பினால், முதலில் உங்கள் உணவு பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 23, 2022, 06:54 PM IST
  • பைல்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் தவறான உணவுமுறையாகும்.
  • இதில் கடுமையான வலி ஏற்படுவதோடு, மலத்திலிருந்து ரத்தமும் வெளியேறத் தொடங்குகிறது.
  • யோகாவில் இதற்கென இருக்கும் சில ஆசனங்களை தினமும் செய்வதன் மூலம் மூல நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
மூல நோயால் அவதியா? இந்த இரு ஆசனங்கள் மூலம் நிவாரணம் காணலாம் title=

மூல நோய்க்கு நிவாரணமாகும் யோகா: பைல்ஸ் எனப்படும் மூல நோய் மனிதர்களின் குடல் இயக்கத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இந்த நோய்க்கு முக்கிய காரணம் தவறான உணவுமுறையாகும். இதில் கடுமையான வலி ஏற்படுவதோடு, மலத்திலிருந்து ரத்தமும் வெளியேறத் தொடங்குகிறது. இதன் காரணமாகவும் பாதிக்கப்பட்டவருக்கு வலி மேலும் அதிகரிக்கிறது. பைல்ஸ் பிரச்சனைக்கு மலச்சிக்கல் தான் முக்கிய காரணம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஒருவர் நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படும் போது, ​​அவருக்கு பைல்ஸ் நோய் வரும். 

பைல்ஸ் நோய் உள்ளவர்கள் இந்த நோயிலிருந்து விடுபட விரும்பினால், முதலில் உங்கள் உணவு பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மறுபுறம், யோகா மூலமும் இந்த நோயிலிருந்து விரைவில் விடுபடலாம். யோகாவில் இதற்கென இருக்கும் சில ஆசனங்களை தினமும் செய்வதன் மூலம் மூல நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அந்த ஆசனங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பைல்ஸ் நிவாரணம் - முதல் ஆசனம்: பவன்முக்தாசனம்

தொடர்ந்து யோகா செய்பவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் குறைவாக இருக்கும். யோகாவில் பவன்முக்தாசனம் மிகவும் சிறந்த யோகாசனமாக பார்க்கப்படுகின்றது. இதை தினமும் செய்வதால், மலச்சிக்கல், அமிலத்தன்மை, அஜீரண பிரச்சனைகள் ஆகியவை எளிதில் நீங்கும். இந்த யோகா பைல்ஸ் நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 

எப்படி செய்வது?

பவன்முக்தாசனம் செய்வதன் மூலம் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். பைல்ஸ் பிரச்சனை இருந்தால், அதிலிருந்து விடுபட தினமும் பவன்முக்தாசன் செய்யலாம். 

இந்த ஆசனம் செய்ய முதலில் தரையில் அமர்ந்துகொள்ளுங்கள். பின்னர் முதுகு கீழே படும்படி படுத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் இரு கைகளையும் விரித்து கால்களுக்கு அருகில் எடுத்துச் செல்லுங்கள். இதற்குப் பிறகு, இடது கையால் இடது காலின் முழங்காலைப் பிடித்து, அதை மார்புக்குக் கொண்டு வாருங்கள். இந்த நிலையில் சிறிது நேரம் இருங்கள். இதற்குப் பிறகு, வலது கையால் பவன்முக்தாசனத்தை மீண்டும் செய்யவும்.

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை! 

பைல்ஸ் நிவாரணம் - இரண்டாம் ஆசனம்: பட்டாம்பூச்சி (பட்டர்ஃப்ளை) ஆசனம்

தித்லி ஆசனம் அனப்படும் பட்டாம்பூச்சி ஆசனத்தில் பட்டாம்பூச்சி போன்று அமைர்ந்து ஆசனம் செய்ய வேண்டும். இந்த விதத்தில் அமர்ந்து கால்களை பட்டாம்பூச்சி போல மேலும் கீழும் அசைக்க வேண்டும். இந்த யோகாவை செய்வதன் மூலம் பைல்ஸ் விரைவில் குணமாகும். 

எப்படி செய்வது?

பட்டாம்பூச்சி ஆசனம் செய்ய, சூரியனை பார்த்த திசையில் தளர்வான தோரணையில் தரையில் அமரவும். இப்போது உங்கள் இரு கால்களையும் முன்னோக்கி விரித்து, பின் வளைத்து, முழங்கால்களையும் உள்ளங்கால்களையும் ஒன்றாக இணைக்கவும். பின்னர், தளர்வான தோரணையில் அமர்ந்து, தொடைகளால் தரையில் தொடவும். இதற்குப் பிறகு, உங்கள் இரு கைகளாலும் உள்ளங்கால்களைப் பிடிக்கவும். பிறகு கண்களை மூடிக்கொண்டு கால்களை பட்டாம்பூச்சி போல அசைக்கவும். இந்த முத்ராவை சுமார் 15 நிமிடங்கள் செய்யவும்.

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு யோகாவை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இது மூல நோய் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவலின் துல்லியம் மற்றும் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் இதன் தார்மீக பொறுப்பு ஜீ மீடியாவுக்கு இல்லை. எந்தவொரு தீர்வையும் முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம்.)

மேலும் படிக்க | புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா? இதை படித்தால் இன்றே விட்டுவிடுவீர்கள்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News