இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் தயிர் சாப்பிடக்கூடாது!

தயிரில் ஏராளமான ஊட்டசத்துகள் நிரம்பியிருந்தாலும், அதனை அனைவரும் சாப்பிட முடியாது. தயிர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:45 PM IST
  • தயிரை இரவில் சாப்பிடலாமா?
  • சுடவைத்து சாப்பிட்டால் கெடுதலா?
  • நிபுணர்கள் கூறுவது விளக்கம்
இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் தயிர் சாப்பிடக்கூடாது! title=

தயிரை எப்படி சாப்பிடலாம்?

சில சமயங்களில் தயிர் நன்கு உறையாமல் இருக்கும். அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும். அதனை உட்கொண்டால், பசியைக் குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகியவை ஏற்படும். இதனால், நன்கு உறைந்த தயிரை சாப்பிடுவது சிறந்தது. மண் சட்டியில் தயிரை உறைய வைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. நன்கு கெட்டியாகவும், தேக ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகவும் இருக்கும். 

தயிரை சுடவைத்து சாப்பிடலாமா?

தயிரை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என சில நிபுணர்கள் கூறுகிறார்கள். எண்ணெயில் கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்றதல்ல. மேலும், உடல் எடையை கூட்ட வேண்டும் என விரும்புபவர்கள், வேகவைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய்த் துவையலுடன் தயிர் சாப்பிடலாம். உறைந்த தயிரின் காணப்படும் தெளிந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு, தலைச்சளி நீங்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அதிமருந்தான வெந்தயத்தின் அற்புத நன்மைகள்

உடல் சூட்டை குறைக்கும் தயிர் 

தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்த்து குளிர வைத்து சாப்பிடலாம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மேலும், பசியில்லாதவர்கள் லேசான புளிப்புடன் இருக்கும் தயிரை சாப்பிட்டால் பசி எடுக்கும்.

யார் சாப்பிடக்கூடாது?

நன்றாக புளித்த தயிர் ரத்தக்கொதிப்பு. பித்த வாயு, வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. இரவில் குளிர்ச்சியான தன்மையில் தயிரைச் சாப்பிட்டால் ஜீரணக்குறைவு, மூச்சிறைப்பு, ரத்த சோகை, காமாலை, தோல் நோய்கள், ரத்தக்கொதிப்பு போன்றவை உண்டாகும். இரவில் தயிர் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது சீரகம், இந்துப்பு, பெருங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News