உடல் பருமனுக்கு இவை மட்டும் காரணமல்ல... கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்!

Myths Around Obesity: உடல் பருமன் உலகின் பெரும்பாலான பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதை சுற்றி சில தவறான புரிதல்களும், கட்டுக்கதைகளும் உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Feb 23, 2023, 06:55 AM IST
  • உலகில் 650 பேருக்கு உடல் பருமன் இருக்கிறது - WHO.
  • இதற்கு உயிரியல், மரபியல் மற்றும் பல காரணிகள் உள்ளன.
  • மன அழுத்தமும் உடல் பருமனுக்கான ஒரு காரணம்.
உடல் பருமனுக்கு இவை மட்டும் காரணமல்ல... கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்! title=

Myths Around Obesity: உடல் பருமன் என்பது ஒரு சிக்கலான உடல்நிலை என்றாலும், இது கலோரி உட்கொள்ளல் அடிப்படையில் மட்டும் பார்க்க முடியாது. உயிரியல், மரபியல் மற்றும் பல காரணிகள் உடல் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கின்றன. 

பொதுவாக, அதிக உடல் எடை குறியீட்டெண் (பிஎம்ஐ) இருந்தால், ஒருவருக்கு உடல் பருமன் இருப்பதாக மருத்துவப் பயிற்சியாளர் பரிந்துரைக்கலாம். உலகில், வயது வந்தோருக்கு சுமார் 650 மில்லியன் பேருக்கு உடல் பருமன் இருப்பதாக உலக சுகாதார மையம் மதிப்பிடுகிறது. உடல் பருமன் உலகின் பெரும்பாலான பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதை சுற்றி சில தவறான புரிதல்களும், கட்டுக்கதைகளும் உள்ளன.

கட்டுக்கதை 1: அதிகமாக உண்பதுதான் காரணம்

உங்கள் உடலுக்குத் தேவையானதை விட அதிக கலோரிகளை உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்தும். ஆனாலும், இதனை பொதுமைப்படுத்தக் கூடாது. போதிய தூக்கமின்மை, நாள்பட்ட மன அழுத்தம், நாள்பட்ட வலி, உணவுக் கோளாறுகள், மனச்சோர்வு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல காரணிகளும் உடல் பருமனுக்கு பங்களிக்கின்றன. சில நேரங்களில், அதிகப்படியான உணவும் இதற்கு அறிகுறியாக இருக்கலாம். 

கட்டுக்கதை 2: நீரிழிவு நோய் உடல் பருமனால் ஏற்படுகிறது

உடல் பருமன் என்பது ஒரு சிக்கலான மருத்துவ நிலை. ஆனால், இது நேரடியாக நீரிழிவு நோயை ஏற்படுத்தாது. இது, டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்தான காரணிதான். ஆனால் பருமனான அனைவருக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் என்பது சரியல்ல.

மேலும் படிக்க | ஓவரா வெயிட் போடுதா? ரோஸ் டீ குடிங்க, சீக்கிரமே எடை குறையும்!!

கட்டுக்கதை 3: உடல் பருமனாவர்கள் சோம்பேறிகள்!

கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை உடல் பருமனுக்கு பங்களிக்கும் ஒரு காரணியாக இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் ஒரே காரணம் அல்ல. உடல் பருமனானவர்கள் 'சோம்பேறிகள்' என்று ஒரு பொதுவான சார்பு உள்ளது, இது தவறானது. சில நேரங்களில் ஹைப்போ தைராய்டிசம், பிற வளர்சிதை மாற்ற நிலைமைகள் போன்ற பிற சுகாதார நிலைமைகள் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். PCOS போன்ற நிலைகளில், எடை அதிகரிப்பு ஒரு அறிகுறியே தவிர, காரணம் அல்ல. மனச்சோர்வு போன்ற உளவியல் நிலைமைகள் மக்களில் உந்துதலின் உணர்வையும் சேதப்படுத்தலாம். 

கட்டுக்கதை 4: இது மரபணு சார்ந்தது.

உடல் பருமனால் பாதிக்கப்பட்ட உறவினர்களைக் கொண்டவர்கள் அதிக ஆபத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அடிப்படையில் பருமனாக உருமாற மாட்டார்கள். மரபியலை விட சுற்றுச்சூழல் காரணிகள் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. உடல் பருமனை ஏற்படுத்தும் எந்த ஒரு மரபணுவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகின்றன. 

எனவே, இத்தகைய கட்டுக்கதைகளை நம்புவதன் மூலம், சரியான பிரச்னையை அடையாளம் காணாமல், அதற்கான தீர்வை அணுகாமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, உடல் பருமனை பொதுமைப்படுத்தி, பாதிக்கப்பட்டவரை குற்றவுணர்ச்சிக்கோ அல்லது தாழ்வு மனப்பான்மைக்கோ இட்டுச்செல்லாமல், முறையான மருத்துவ வல்லுநர்களை ஆலோசிக்கும்படி பரிந்துரைக்கவும். அதுவே, அவரவர் உடல் குறித்த புரிதலை ஏற்படுத்தும். 

 (பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியங்கள் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | PCOD, ஹார்மோன் பிரச்சனைகளுக்கு வரப்பிரசாதமாகும் 'மஞ்சட்டி' மூலிகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News