திருமணமான ஆண்களின் ஆரோக்கியத்திற்கான குறிப்புகள்: திருமணத்திற்குப் பிறகு, ஆண்களின் பொறுப்புகள் நிறைய அதிகரிக்கின்றன, இதன் காரணமாக அவர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது, அத்துடன் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனிம் செலுத்துவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஆண்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை எதிர்மறையான விளைவை ஏற்படுத்தத் தொடங்குகிறது.
பெரும்பாலும் ஆண்கள் இரவில் சில தவறுகளை செய்கிறார்கள், அதற்காக அவர்கள் பின் வரும் காலத்தில் பணம் அதிகம் செலுத்த வேண்டி வரும் என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே திருமண ஆண்கள் இரவில் எந்தெந்த ஆரோக்கிய குறிப்புகளை பின்பற்றலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | விந்தணு குறையாமல் இருக்க இந்த உணவுகளை தவிர்க்கவும்
போதுமான தூக்கமின்மை
பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியம், இல்லையெனில் நம் உடலும் மனமும் மிகவும் வருந்தும் என்று கூறப்படுகிறது. எனவே அலுவலக ஏற்படும் பணியின் அழுத்தத்தில் உங்களின் தூக்கத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள், இல்லையெனில் ஆண்கள் அதிக பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு இரையாகத் தொடங்குவார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் திருமண வாழ்க்கையும் கசப்பாக மாறிவிடும். நல்ல தூக்கத்தை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.
திருமணமான ஆண்கள் இரவில் இதை கட்டாயம் செய்ய வேண்டும்
திருமணமான ஆண்களால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றால், அவர்கள் இன்சோம்னியா போன்ற பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர் என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். அதன்படி.,
* சிறந்த தூக்கத்தைப் பெற, உங்கள் தூக்க முறையை சரிசெய்யவும், அதாவது இரவில் தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கவும், அதேபோல் காலையில் எழுந்திருக்கும் நேரமும் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராமல் இருக்க முயற்சிக்கவும்.
* இரவில் தூங்குவதற்கு முன், ஒரு திருமணமான ஆண் மிகவும் லேசான உணவை எடுத்துக்கொள்ளக்கூடாது, ஏனெனில் அது சரியான தூக்கத்தில் குறுக்கிடச் செய்யலாம். எனவே தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
* உறங்கும் முன், உங்கள் அறையின் வளிமண்டலம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இந்த விஷயத்தைப் பாருங்கள். அறையின் வெப்பநிலை மிகவும் குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள், அப்படி செய்வதால் சரியான தூக்கத்தைப் பெற உதவும்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR