காய்ந்தாலும் ஊட்டச்சத்து குறையாத கீரை! ரத்தசோகைக்குக் மருந்தாகும் முருங்கைக்கீரை

Moringa Leaves For Anemia:  முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை, ரத்த விருத்திக்கு உதவும் முருங்கைக்கீரை...

Last Updated : Oct 10, 2023, 11:31 PM IST
  • ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அமினோ அமிலங்கள்
  • 20 அமினோ அமிலங்களில் 18 முருங்கைக்கீரையில் உள்ளது
  • அனீமியாவை போக்கும் முருங்கைக்கீரை
காய்ந்தாலும் ஊட்டச்சத்து குறையாத கீரை! ரத்தசோகைக்குக் மருந்தாகும் முருங்கைக்கீரை title=

முருங்கைக்கீரை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருகிறது என்றால், மரத்தில் முளைக்கும் ஒரே கீரை முருங்கைக் கீரைதான். மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டியிருக்கும் நிலையில், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், சுத்தம் செய்வதும் சுலபம் தான். 

வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மேக்னிசியம்,  நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பீட்டாகரோடின் நிறைந்துள்ளன. அதிலும் முருங்கைக்கீரை, சத்துக்கள் அதிகம் கொண்ட கீரைகளின் பட்டியலில் முதல் இடத்திற்குள் உள்ள முருங்கைக் கீரையில் கலோரி மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால்,  செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்கிறது. புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.  

வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உண்டால் ஆரோக்கியம் மேம்படும். அதிலும், முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரை, ஆண்களுக்கான பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும் திறனைக் காட்டியுள்ளது. வைட்டமின் ஏ விந்தணு உற்பத்தி மற்றும் விறைப்புத்தன்மைக்கு பங்களிக்கிறது. வைட்டமின் சி உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுவதால், இது ஆண்களின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க | Low BP: ரத்த அழுத்தம் குறைவாக இருக்க? இந்த காய்களை சாப்பிடவேக்கூடாது!

முருங்கைக்கீரையில் இருந்து எடுக்கப்படும் முருங்கைச் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கை மிகவும் நல்லது. 
முருங்கைக்காயில் உள்ள புரதச்சத்து மிகவும் தரமானது, தொடர்ந்து முருங்கைக்காய் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.  

ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 முருங்கைக்கீரையில் உள்ளது.

moringa benefits
மனித உடலால் தயாரிக்கப்பட முடியாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில், அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை என்பது ஆச்சரியம் அளிப்பது ஆகும்.

முருங்கைப்பூவின் மகத்துவம்
முருங்கையின் அனைத்து பாகங்களைப் போலவே, முருங்கைப்பூவும் மருத்துவ குணங்களைக் கொண்டது. நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

ரத்த விருத்திக்கு முருங்கைக்கீரை
ஹீமோகுளோபின் அளவை பல மடங்கு அதிகரிக்கும் முருங்கைக்கீரை ரத்தசோகை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க | ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் அவர்களின் மன நலனை எவ்வாறு பாதிக்கிறது?

தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ ஊட்டச்சத்தும் முருங்கைக்கீரையில் கிடைக்கிறது.

அதேபோல, வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

முருங்கையின் நன்மைகளைப் பற்றி பேசும்போது, மற்றுமொரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடக்கூடாது. கீரைகளை பசுமை மாறாமல் சாப்பிட்டால் தான் முழு ஊட்டச்சத்துக்களும் முழுமையாக கிடைக்கும். ஆனால், முருங்கைக்கீரை மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த பிறகும் ஊட்டச்சத்துகள் மாறாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | தினமும் ‘இதை’ செய்தால் இரத்த அழுத்தம் சீராகும்..செய்து பாருங்களேன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News