Migraine: ஒற்றைத் தலைவலியை ஓரம் கட்ட சூப்பரான வீட்டு வைத்தியங்கள் இதோ

நமது மூளையின் நரம்பு மண்டலத்தில் உள்ள சில கோளாறுகள் காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இதனுடன், ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2021, 06:57 PM IST
  • ஒற்றைத் தலைவலியின் தாக்கம் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை இருக்கக்கூடும்.
  • மைக்ரேன் வலியைப் போக்க இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • தலைவலி ஏற்பட்டால், உடனடியாக பிளாக் காபி குடிக்கவும்.
Migraine: ஒற்றைத் தலைவலியை ஓரம் கட்ட சூப்பரான வீட்டு வைத்தியங்கள் இதோ title=

ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபட வீட்டு வைத்தியம்: குளிர்காலம் தொடங்கினாலே, ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் அதிகரிக்கிறது. ஒற்றைத் தலைவலியில், நோயாளியின் தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலி இருக்கும். 

பொதுவாக, நமது மூளையின் நரம்பு மண்டலத்தில் உள்ள சில கோளாறுகள் காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இதனுடன், ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைவலியின் தாக்கம் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை இருக்கக்கூடும். இந்த குளிர்காலத்தில் நீங்களும் அடிக்கடி ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றலாம். 

ஒற்றைத் தலைவலியின் முக்கிய அறிகுறிகள்:

- தலையின் ஒரு பகுதியில் கடுமையான வலி

- குமட்டல் உணர்வு

- வாந்தி சங்கடம்

- அதிக சத்தம் மற்றும் வெளிச்சத்தில் தலை வலி

ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றவும்:

ஒற்றைத் தலைவலிக்கு இஞ்சி ஒரு நல்ல தீர்வு 

மைக்ரேன் (Migraine) வலியைப் போக்க இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒற்றைத் தலைவலியால் ஏற்படும் வாந்தி, குமட்டல் போன்ற பெரும்பாலான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் பல அம்சங்கள் இஞ்சியில் உள்ளன. இதனுடன், தலைவலியைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். 

ALSO READ | Migraine: ஒற்றைத் தலைவலியா... இந்த ‘7’ உணவுகளுக்கு ‘NO’ சொல்லுங்க..!!! 

இஞ்சியைப் பயன்படுத்த, ஒரு அங்குல இஞ்சியை எடுத்து நன்றாக நீரில் கழுவி, தோலை உரிக்கவும். இதற்குப் பிறகு, அதை நறுக்கி ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, அதை வடிகட்டி ஆறவைத்து, இந்த இஞ்சி தண்ணீரை சில துளிகள் எலுமிச்சை சேர்த்து குடிக்கவும். சிறிது நேரத்தில், ஒற்றைத் தலைவலியிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். 

காபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

காபியில் ஒற்றைத் தலைவலியை உடனடியாக அகற்றக்கூடிய பல பண்புகள் உள்ளன. காபியில் (Coffee) உள்ள காஃபின் ஒற்றைத் தலைவலியில் அடினோசின் போல செயல்படுகிறது. இதனால் வலியில் நிவாரணம் கிடைக்கும். ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபட பிளாக் காபி மிகவும் பயனுள்ள வழியாகும். தலைவலி ஏற்பட்டால், உடனடியாக பிளாக் காபி குடிக்கவும்.

தலை மசாஜ்

ஒற்றைத் தலைவலியால் ஏற்படும் கடுமையான அசவுகரியத்தின் போது, தலை மசாஜ் மிக நல்ல நிவாரணத்தை அளிக்கின்றது. மசாஜ் செய்வதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது தலைவலிக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது. குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு ஏதேனும் எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

கொத்தமல்லி விதை தேநீர்

தலைவலியை நீக்குவதில் கொத்தமல்லி (Coriander) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒற்றைத் தலைவலியிலிருந்து தீர்வு காண இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது, கொத்தமல்லி விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கலாம். இதன் மூலம் தலைவலியில் உடனடி நிவாரணம் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகள் மற்றும் நிவாரணங்களை நாங்கள் உறுதிபடுத்தவில்லை. இவை கல்வி நோக்கத்திற்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. எந்த வித செயல்முறையை பின்பற்றுவதற்கு முன்னரும், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.) 

ALSO READ | தினமும் ஒரு செவ்வாழை உண்பதால் கிடைக்கும் பலன்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News