அசைவ உணவுகளுக்கு இணையான புரத சத்து உள்ள மசூர் பருப்பு... வியக்க வைக்கும் நன்மைகள்

மசூர் தால் அல்லது சிவப்பு பருப்பு என்னும் மசூர் பருப்பில் புரோட்டீன் மிக அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படும் புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய இந்த பருப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 9, 2024, 06:15 PM IST
  • மசூர் பருப்பு உட்கொள்வதன் மூலம் அசைவ உணவுக்கு சமமான புரதத்தைப் பெறலாம்.
  • தென்னிந்தியாவிலும் மசூர் பருப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • மசூர் பருப்பில் காணப்படும் பல வகை சத்துக்கள்.
அசைவ உணவுகளுக்கு இணையான புரத சத்து உள்ள மசூர் பருப்பு... வியக்க வைக்கும் நன்மைகள் title=

பல வகையான பருப்பு வகைகள் உள்ளன. அவை அனைத்துமே புரத சத்து நிறைந்தவை. புரோட்டீன் நிறைந்த பருப்புகள் ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் இன்று அசைவத்துக்குக் குறையாததாகக் கருதப்படும் ஒரு பருப்பைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மசூர் தால் அல்லது சிவப்பு பருப்பு என்னும் மசூர் பருப்பில் புரோட்டீன் மிக அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படும் புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய இந்த பருப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மசூர் பருப்பில் காணப்படும் சத்துக்கள்

மசூர் பருப்பில் புரத சத்துடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.இதை உட்கொள்வதன் மூலம் அசைவ உணவுக்கு சமமான புரதத்தைப் பெறலாம். பொதுவாக, ஒன்றரை கப் சமைத்த மசூர் பருப்பில் 140 கலோரிகள் மற்றும் கொழுப்பு 0.5 கிராம், கார்போஹைட்ரேட்டுகள் 23 கிராம், நார்ச்சத்து 9 கிராம், சோடியம் 5 மி.கி, புரதம் 12 கிராம் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை ஏராளமாக உள்ளன.

இந்திய சமையல்களில் மசூர் பருப்பு தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த மசூர் தால் (Masoor dal) இப்போது தென்னிந்தியாவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மசூர் பருப்பின் நன்மைகளை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1. மசூர் பருப்பில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

2. குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் எடையைக் கட்டுப்படுத்த (Weight Loss Tips) உதவுகிறது.

3. மசூர் பருப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதோடு, இதன் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

4. இதில் உள்ள துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

5. இதனை குறைந்த அளவில் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

6. எலும்புகள் மற்றும் தசைகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

7. கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டட்ய்ஹால், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் இது உதவும்.

மேலும் படிக்க | மூளையும் உடலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க... தினம் காலையில் நெல்லிக்காய் ஜூஸ்

மசூர் பருப்பு பக்க விளைவுகள்

மசூர் பருஒப்பில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளது. ஆனாலும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர, அதிக யூரிக் அமில நோயாளிகள் வாயு அல்லது பிடிப்புகள், அமிலத்தன்மை மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் இருந்தால், இதனை தவிர்ப்பது நல்லது. இது உங்கள் பிரச்சனையை தீவிரமாக்கலாம். இந்த பிரச்சனைகள் இல்லாதவர்கள், உங்கள் உணவில் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம், இது உங்களுக்கு பல நன்மைகளைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இதற்கு பொறூப்பேற்காது.)

மேலும் படிக்க | முருங்கை இலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்க... உடம்பு தெம்பாகும் - இந்த 4 நன்மைகள் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News