Avocado: தாய்பாலுக்கு நிகரான சத்து கொண்ட பழம்! மனசோர்வை விரட்டும் கனி!

மனச்சோர்வு மற்றும் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகளை குறைக்க அவகேடோவின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 10, 2022, 12:09 PM IST
  • தாய்பாலுக்கு நிகரான சத்து கொண்ட கனி
  • கனிகளில் மிகவும் பிரபலமாகாத பழம்
  • மனசோர்வை விரட்டும் அவக்கோடா
Avocado: தாய்பாலுக்கு நிகரான சத்து கொண்ட பழம்! மனசோர்வை விரட்டும் கனி! title=

பழங்கள் ஆரோக்கியத்திற்கான பாதையை வளமாக்குபவை. ஒவ்வொன்றும் ஒருவிதம், ஊட்டச்சத்துக்கள், நன்மை தீமை என பல்வேறு குணநலன்களை கொண்டவை பழங்கள்.

தனிச்சிறப்பு வாயந்த பழங்களில் ஒன்று அவக்கோடா பழம். செரிமானத்தை மேம்படுத்துவது, மனச்சோர்வு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாப்பது என இந்த பழம் பல்வேறு சிறப்புப் பண்புகளை கொண்டுள்ளது. 

அலிகேட்டர் பேரிக்காய், ஆனைக்கொய்யா வெண்ணெய் பழம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் அவக்கோடாவில் கணிசமான அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

ஆரோக்கியமான பழமான அவக்க்கோடவின் ஊட்டச்சத்து (Nutrients of the Fruit) பட்டியல் நீளமானது. வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் பி6 உள்ளன. ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலேட், பாந்தோத்தேனிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் இந்தப் பழத்தில் உள்ளன. அதுமட்டுமல்ல, லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களையும் கொண்டுள்ளது ஆனைக்கொய்யா.

READ ALSO | புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு அருமருந்தாகும் பழம்!

ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது, மேலும் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையவும் உதவும் நல்ல கொழுப்பு அதிக அளவில் அவக்கோடாவில் உள்ளது. 

கண் பார்வைக்கு சிறந்ததாக கருதப்படும் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை புற ஊதா ஒளி உட்பட சேதத்தை குறைக்க உதவுகின்றன. இதயத்திற்கும் ஆரோக்கியத்தை தருகிறது அவக்கோடா.  

அவக்கோடாவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பீட்டா கரோட்டின் போன்ற பிற நன்மை பயக்கும் கொழுப்பில் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்ற சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகிறது. எனவே, வயது மூப்பின் காரணமாக ஏற்படும் வளர்சிதை மாற்ற அபாயத்தைக் குறைக்க அவக்கோடா உகந்தது.

எலும்புகளை வலுப்படுத்த தேவையான வைட்டமின் கே ஊட்டச்சத்து (Vitamin K) அவக்கோடாவில் கணிசமாக உள்ளது. பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. போதுமான வைட்டமின் கே உட்கொள்வது கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கும். எனவே அவக்கோடாவை அடிக்கடி சாப்பிடுவதால், கால்சியம் கழிவாக வெளியேறுவதை தடுப்பதோடு, எலும்புகளும் வலுப்பெறும். 

ALSO READ | ஆரோக்கியமான விந்தணுவிற்கு உத்தரவாதம் தரும் பழம்

புற்றுநோய் பாதிப்பை எதிர்க்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஆனைக்கொய்யா, பெருங்குடல், வயிறு, கணையம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. 

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஃபோலேட் முக்கியமானது. ஆனைக்கொய்யாவில் உள்ள இந்தச் சத்து, கருச்சிதைவு மற்றும் நரம்புக் குழாயில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு அவக்கோடா பழம் நன்மை பயக்கிறது. இந்தப் பழத்தில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கருவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மனச்சோர்வு அபாயத்தையும் குறைக்கும். 

 ஃபோலேட் சத்து, ஒட்டுமொத்த உணவு ஆரோக்கியத்தில் (Nutrient for health) முக்கிய பங்கு வகிக்கிறது. ஹோமோசைஸ்டீன் உருவாக்கத்தைத் தடுக்க உதவுகிறது, இது மூளைக்குத் தேவையான இரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதால், சிந்தனை செயலிழப்பு, மனச்சோர்வு, மனநிலை, தூக்கம் மற்றும் பசியின்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

அவக்கோடாவில் இயற்கை நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. பித்தம் மற்றும் மலம் மூலம் நச்சுகளை வெளியேற்றுவதற்கு முக்கியமானது.

ALSO READ | வில்வப் பழத்தில் இத்தனை நன்மைகளா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News