உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, நீங்கள் முதலில் உங்கள் உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும், ஏனென்றால் சிலரின் மோசமான உணவூ பழக்கத்தின் காரணத்தால் அவர்களின் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்ன என்ற கேள்வியும் பலரது மனதில் உள்ளது. அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு இவையே முக்கியக் காரணம்
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
முதலில், நீங்கள் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடலில் அதே விளைவை ஏற்படுத்தும். கொழுப்பு நிறைந்த பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த விஷயங்களில் இருந்து விலகி இருந்தால் நல்லது. அதற்கு பதிலாக நீங்கள் பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க | புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.
உடல் பருமன்
உங்கள் எடை அதிகரிக்கும் போது, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வழியில் நீங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகிக்கொள்ள வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படாமல் இருக்க, நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்
நீங்கள் மது அருந்துபவராகவும், புகைபிடிப்பவராகவும் இருந்தால் உங்கள் ஆரோக்கியத்துடன் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றாக்கும், ஏனென்றால் இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு விஷயங்களையும் நீங்கள் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும்.
உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்
தற்போதைய காலகட்டத்தின் பிஸியான வாழ்க்கை முறையால், மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை, ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த உடற்தகுதியை பராமரிக்கவும் உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. இது கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)
மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்; கட்டுப்படுத்துவது எப்படி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR