சட்டுனு உடல் எடையை குறைக்கணுமா: இந்த சுவையான பழத்தை சாப்பிடுங்க

Health Benefits of Lychee: சுவை மற்றும் ஆரோகியம் நிறைந்த பழங்களில் லிச்சி பழமும் ஒன்றாகும். இந்த பழம் மக்களை தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் பெற்றது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 26, 2022, 02:28 PM IST
  • கோடை காலத்தில் அதிக சுவையுள்ள பல புதிய மற்றும் ரசமிக்க பழங்களை நாம் சுவைக்க முடியும்.
  • லிச்சி சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது, இது தொப்பை கொழுப்பை விரைவாக குறைக்கத் தொடங்குகிறது.
  • லிச்சியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.
சட்டுனு உடல் எடையை குறைக்கணுமா: இந்த சுவையான பழத்தை சாப்பிடுங்க title=

கோடை காலத்தில் லிச்சியின் பலன்கள்: இந்தியாவில் கோடை காலம் தொல்லை தரும் காலமாக இருந்தாலும், சிலர் இந்த சீசனுக்காக ஆவலுடன் காத்திருப்பதும் உண்டு. ஏனெனில் இந்த காலத்தில் அதிக சுவையுள்ள பல புதிய மற்றும் ரசமிக்க பழங்களை நாம் சுவைக்க முடியும். 

கோடை கால பழங்களில் சில பழங்களை சாப்பிடுவதால், நம் உடல் எடையும் குறைகிறது. சுவை மற்றும் ஆரோகியம் நிறைந்த பழங்களில் லிச்சி பழமும் ஒன்றாகும். இந்த பழம் மக்களை தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் பெற்றது.  

லிச்சி பழம் விழுதி அல்லது விழுச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது விளாச்சி வகையை சேந்த தாவரமாகும். 

கோடை காலத்தில் லிச்சி சாப்பிட வேண்டும்

கோடை காலத்தில், எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக உடலில் நீரிழப்பு ஏற்படாத மற்றும் எடை அதிகரிப்புக்கு காரணமில்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் லிச்சியை உட்கொண்டால், அது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும். லிச்சி சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | வெள்ளை முடியை பிடுங்கினால் தலை முழுவதும் வெள்ளை முடி ஆகுமா 

கோடையில் லிச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

- லிச்சி சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது, இது தொப்பை கொழுப்பை விரைவாக குறைக்கத் தொடங்குகிறது.

- பலர் உடல் எடையைக் குறைப்பதில் சிரமப்படுகிறார்கள். லிச்சியில் மிகக் குறைவான கலோரிகள் இருப்பதால், உடல் எடையைக் குறைப்பதில் பயனளிக்கிறது.

- இந்த பழத்தில் பொட்டாசியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால் லிச்சி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

- நீங்கள் கர்ப்பமாகவோ தாய்ப்பால் கொடுக்கும் நபராகவோ இருந்தால், லிச்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- லிச்சி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால், பல வகையான தொற்றுநோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம்.

- லிச்சியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.

- நமது செரிமான அமைப்பை மேம்படுத்தி, வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தாத பல ஊட்டச்சத்துக்கள் லிச்சியில் காணப்படுகின்றன.

- லிச்சியில் 80 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதால், சருமத்திற்கு இது ஒரு ஒரு மருந்து போல உதவுகிறது. இதை சாப்பிட்டால் முகம் பளபளக்கும்.

- லிச்சி சாப்பிடுவது காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கிறது

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தி பாருங்க: எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News