ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சென்ற மாதம் கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையில், பங்கேற்று, கொரோனா தடுப்பூசி அவருக்கு போடப்பட்டது.
கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவருக்கு எந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டது. இதைஅ தடுப்பூசியின் தோல்வியாக கருத வேணுமா என்ற கேள்விகளும் விவாதங்களும் சமூக ஊடகங்களில் தீவிரமடைந்துள்ளன.
ஹரியானா அமைச்சர் அனில் விஜ் சனிக்கிழமை காலை ஒரு ட்வீட்டில், தனக்கு தொற்று ஏற்பட்டுள்ள தகவலை வழங்கினார். அவர் இப்போது அம்பாலா கான்ட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனில் விஜ் பாரத் பயோடெக்கின் கோவிட் தடுப்பூசி கோவேக்ஸின் (COVAXIN) வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனையில் அவர் பங்கேற்றார். இப்போது அனில் விஜின் கொரோனா தொற்றுக்குப் பிறகு, இந்த தடுப்பூசியின் திறன் குறித்து மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அனில் விஜுக்கு நவம்பர் 20 ஆம் தேதி அம்பாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கேவாக்சின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், கோவாக்சினின் மூன்றாம் கட்டம் பரிசோதனை நெறிமுறையில் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் 0.5 மி.கி அளவிற்கு இரண்டு தடுப்பூசிகளை போட வேண்டும். இரண்டாவது டோஸ் முதல் டோஸுக்குப் கொடுத்த பிறகு 28வது நாளில் போடப்படும். அதாவது அனில் விஜ் அவர்களுக்கு இந்த தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்னும் கிடைக்கவில்லை.
ALSO READ | அமெரிக்காவில் பட்டை கிளப்பும் நம்ம “ரசம்”.. காரணம் என்ன தெரியுமா..!!!
இத்தகைய சூழ்நிலையில், தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் கொடுக்கப்படாத வரை கோவிட்டிலிருந்து (COVID-19) நோய் கொரோனா எதிர்ப்பு சக்தி கடினம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், வல்லுநர்கள் அனில் விஜை முழுமையாக பரிசோதனை செய்ய உள்ளனர்.
கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் நாட்டில் இதுவரை சுமார் 26,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவை தவிர, வேறு எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
உலகம் முழுவதும் இதுவரை தயாரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் இரட்டை டோஸ் தடுப்பூசி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதில் ஃபைசர் (Pfizer) , மாடர்னா, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஆகியவை அடங்கும். இது தவிர, எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் வெற்றிகரமாக இல்லை. மாடர்னா மற்றும் ஃபைசரும் 95 சதவீதம் செயல்திறன் கொண்டதாக உள்ளது என்று அந்நிறுவனங்கள் கூறியுள்ளனர். இதன் பொருள், தடுப்பூசி எடுத்துக் கொண்ட 5 சதவீத மக்கள் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருக்கலாம். இதன் காரணமாக, கோவேக்ஸின் மருந்து தோல்வி என கருத முடியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ALSO READ | எங்கிருந்து வந்தது COVID-19.. ஆணிவேரை ஆராய்கிறது WHO ...!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR