புதுடெல்லி: உலகில் மனித குலத்தின் தொடர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு மகத்தானது. குழந்தைப் பேறு என்ற மாபெரும் சக்தியைக் கொண்டிருப்பதால் சக்தி என்று அறியப்படும் பெண்ணின் மரபணுக்கள் உலகில் மனித இருப்புக்கு முக்கியமானது.
பெண்களின் தனிப்பட்ட மரபணு அமைப்பில் ஏற்படும் மாறுதல்கள், பல தலைமுறைகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் மரபணு கோளாறை ஏற்படுத்தலாம். ஒரு மரபணுவின் டிஎன்ஏ இழையில் உள்ள எளிய பிறழ்வைப் பொறுத்து, சிறியது முதல் பெரியது வரை முழு குரோமோசோம் அல்லது குரோமோசோம்களின் தொகுப்பில் ஒட்டுமொத்த மாற்றம் ஏற்படலாம்.
பொதுவாக சில மரபணு கோளாறுகள் பெற்றோரிடமிருந்து பெறப்படுகின்றன. அதைத்தவிர, மரபணு அல்லது மரபணுக் குழுவில் ஏற்படும் பிறழ்வு அல்லது மாற்றங்கள் காரணமாகவும் மரபணுவில் மாற்றங்கள் ஏற்படும். சுற்றுச்சூழல் காரணிகள், நச்சுகள், சிலவகை ரசாயனங்கள், கதிர்வீச்சுகள் வெளிப்பாடு உட்பட அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ALSO READ | குளிர்காலத்திலும் சுறுசுறுப்பாக இருக்க எளிய குறிப்புகள்
மரபணு கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் இவைதான்:
35 வயதிற்குப் பிறகு மரபணுவில் மாறுதல்கள் அதிகரிக்கின்றன. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கருச்சிதைவுகள் மற்றும் பிறப்பு குறைபாடுகளின் முந்தைய வரலாறும் மரபணு மாறுதல்களுக்கு காரணமாகிறது.
புற்றுநோய் ஏற்படுவதும், அதற்காக எடுத்துக் கொள்ளும் கீமோ/ரேடியோதெரபி சிகிச்சையும் மரபணு பிறழ்வுக்கு முக்கியமான காரணியாக இருக்கிறது. புற்றுநோய் பாதித்த பெண்கள், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன் அல்லது சிகிச்சைக்கு உட்படுத்தும் முன்னதாக மரபணு ஆலோசனை பெறுவது முக்கியமானது.
ஏனென்றால், தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய் பரவும் அபாயத்தை மதிப்பிடுவதற்கு மரபணு சோதனைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.
ALSO READ | குளிர்காலத்தில் பேரீச்சம்பழங்களை சாப்பிட ஆண்களுக்கு இந்த காரணம் போதாதா?
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை சில பொதுவான மரபணு கோளாறுகள்:
டவுன் சிண்ட்ரோம் (Down syndrome) என்பது மிகவும் பொதுவான மரபணு கோளாறு ஆகும், இதில் குரோமோசோம்களில் இருந்து கூடுதல் மரபணு பொருட்கள் புதிதாக உருவாகும் கருக்களுக்கு மாற்றப்படுகின்றன.
தலசீமியா கோளாறு (Thalassemia Disorder) என்பது பரம்பரையாக் வரும் ரத்தக் கோளாறு ஆகும், இது உடலில் இயல்பை விட குறைவான ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. இதன் பாதிப்பு ஆளுக்கு ஆள் மாறுபடும். சிறிய அளவிலான பாதிப்புகளுக்கு சிகிச்சை தேவைப்படாது என்றாலும், அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ரத்தம் மாற்ற வேண்டியிருக்கும்.
எனவே, கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன், தம்பதிகள் மரபணு பரிசோதனை செய்துக் கொண்டால், தலசீமியா குறைபாட்டை தங்கள் சந்ததியினருக்கு அனுப்புவதை ஓரளவிற்கு தடுக்கலாம்.
Sickle cell disease என்பது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் பரம்பரை கோளாறு ஆகும், அரிவாள் போன்று தோற்றமளிக்கும் ஒரு செல், ரத்த ஓட்டத்தை தடுப்பதால் ரத்த சோகையை ஏற்படுத்தும். தசைநார் சிதைவு (Muscular Dystrophy) என்பது ஒரு தசைக் கோளாறு, இது பெற்றோரில் இருவருக்குமோ அல்லது யாரவது ஒருவருக்கோ இருக்கும் மரபணு குறைபாட்டால் ஏற்படும்.
READ ALSO | கால்வலியே இல்லாமல் இருக்க உடற்பயிற்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR