Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகின்றன. இதில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் ஒரு தீவிர உடல்நலப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அதனால், மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. கொலஸ்ட்ரால் ஒரு மெழுகு போன்ற கொழுப்பு ஆகும். இது வைட்டமின் டி, ஸ்டீராய்டு ஹார்மோன்கள் மற்றும் பித்த உப்புகளை உற்பத்தி செய்ய கொலஸ்ட்ரால் லிப்போபுரோட்டீன்களாக உடல் முழுவதும் பரவுகிறது. இது குடலில் உள்ள கொழுப்பை உடைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலில் கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் என இரு வகை உள்ளன.
இந்தியாவில் 25 முதல் 30 சதவீதம் பேர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது மிக அவசியமாகும். உணவுகளில் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். சமையலறையில் இருக்கும் சில மசாலாப் பொருட்கள் இயற்கையான வழியில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.
இந்த மசாலாப் பொருட்களில் உள்ள கலவைகள் இயற்கையான வழியில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவியாக இருக்கும். இந்த மசாலாக்கள் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், நரம்புகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் தானாகவே வெளியேறி, கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படும்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மசாலா பொருட்களை பற்றி இங்கே காணலாம்:
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை தொடர்ந்து உட்கொள்வது எல்டிஎல் கொழுப்பை 7-10 சதவீதம் குறைக்கும் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலவங்கப்பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகின்றன. இது உடலில் நல்ல HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதுடன் உடல் எடையும் குறையும். இதை தேநீர் மற்றும் ஸ்மூத்தியிலும் கலந்து உட்கொள்ளலாம்.
பூண்டு
பூண்டில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் பூண்டு உதவியாக இருப்பது மட்டுமின்றி, பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக அமைகின்றது. பூண்டு உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நரம்புகளில் சேரும் கொழுப்பைக் கரைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1-2 பச்சை பூண்டு பற்களை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவை ஆகும். இது நரம்புகளில் பிளேக் குவிவதைத் தடுக்கிறது. மஞ்சள் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். மஞ்சளை தொடர்ந்து உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம். மஞ்சளை பால் அல்லது பல்வேறு உணவுகளில் கலந்து சாப்பிடலாம். இது தவிர மஞ்சளைக் கஷாயமாக்கிக் குடிப்பதும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
இஞ்சி
கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்களுக்கு இஞ்சி பெரிய வழியில் உதவும். இஞ்சியை தொடர்ந்து உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இஞ்சியில் அதிக அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு வகையில் இஞ்சியை உட்கொள்வது அதிக கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை.... 100 நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய் ஜூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ