சிறுநீரக கல்லை கரைக்கும் 3 ஜூஸ்கள்; தினமும் அருந்திட தீர்வு நிச்சயம்

சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில சாறுகளின் உதவியுடன் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2022, 10:09 AM IST
  • சிறுநீரக கல்லினால் ஏற்படும் உடல் பிரச்சனைகள்.
  • தினமும் சாறு அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.
  • தக்காளி, எலுமிச்சை சாறு மிகவும் நன்மை பயக்கும்.
சிறுநீரக கல்லை கரைக்கும் 3 ஜூஸ்கள்; தினமும் அருந்திட தீர்வு நிச்சயம் title=

சிறுநீரக பிரச்சனைகள் மிகவும் உடல் வேதனையை கொடுப்பவை. சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரக கற்கள் பிரச்சனை. ஒருவருக்கு சிறுநீரக கற்கள் வந்தால், அவர் மிகவும் வேதனையான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில்,  பாதிக்கப்பட்ட நபர் தனது உணவுத் திட்டத்தை (Kidney Stone Diet) சிறந்த வகையில் கடி பிடித்தால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். 

உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில சாறுகளின் உதவியுடன் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம். சிறு நீரக கல்லை கரைக்கும் இந்த ஜூஸ்கள் எவை, எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரக கற்களை கரைக்கும் ஜூஸ்

நீங்கள் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த 3 வகையான சாறுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம், இதனால் வலி உட்பட பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்

1. தக்காளி ஜூஸ்

சிறுநீரக கற்களை அகற்ற தக்காளி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இரண்டு தக்காளியை நன்கு கழுவி, அவற்றை அரைக்கவும். சாற்றில் உப்பு மற்றும் கருப்பு மிளகுத் தூள் கலந்து குடிக்க வேண்டும்.  நீங்கள் விரும்பினால், தயாரித்த ஜூஸ் கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னரும் உட்கொள்ளலாம். 

2. எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது.  எனவே சிறுநீரக கல் பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள், எலுமிச்சை சாற்றை உட்கொண்டால், பிரச்சனையை சமாளிக்க முடியும். ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, இப்போது சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, கலவையை நன்றாக கடைந்து, குடித்தால், சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

3. துளசி சாறு

சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து விடுபட துளசி இலையில் இருந்து தயாரிக்கப்படும் சாறு பயனுள்ளதாக இருக்கும். துளசி இலைகளை சாறு எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, காலை மற்றும் மாலையில் சாப்பிட்டால் நலல் பலன் கிடைக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து நிச்சயம் விடுபடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மதிய உணவுக்குப் பிறகு இந்த 3 தவறுகளைச் செய்யக்கூடாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News