நியூயார்க்: குழந்தைகளுக்கான பவுடர், கிரீம் மற்றும் ஷாம்பு தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன், 120 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்தியதால் தனது தனக்கு புற்றுநோய் வந்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டினார்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ப்ரூக்ளினை சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது கணவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குழந்தைகளுக்கான Johnson & Johnson பவுடரை பயன்படுத்தியதாக் தனக்கு புற்றுநோய் (Cancer) ஏற்பட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். அந்த பெண்ணின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், 1970 முதல், தங்கள் டால்கம் பவுடரில் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதை நிறுவனம் அறிந்திருந்த போதும், அதனை நிறுவனம் மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது
மேன்ஹெட்டனில் உள்ள மாநில நீதிமன்ற நீதிபதி ஜெரால்ட் லெபோவிட்ஸ், மே 2019 இல் 14 வார விசாரணைக்குப் பிறகு, டோனா ஓல்சென், 67, மற்றும் ராபர்ட் ஓல்சன், 65, ஆகியோருக்கு 325 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ள 325 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை மிக அதிகம் என்று கூறி நவம்பர் 11 அன்று ஓல்சன் தம்பதியினர் 120 மில்லியன் டாலர் அளவில் இழப்பீடு பெறலாம் அல்லது இழப்பீடு பெற ஒரு புதிய வழக்கைத் தாக்கல் செய்யலாம் என தீர்ப்பளித்தார்.
ALSO READ | தண்ணீரில் கண்டம் என கணித்த டாக்டர்கள்.... தவிக்கும் இளம் பெண்..!!!
எவ்வாறாயினும், அந்தப் பெண்ணின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்றது என்று நிறுவனம் கூறியுள்ளதுடன், 'புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எவருக்கும் எங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் உண்டு, ஆனால், உண்மைகள் மிகவும் முக்கியமானவை. எங்கள் டால்கம் பவுடர் மிகவும் பாதுகாப்பானது மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தாது என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். ' என கூறியுள்ளது.
நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பல வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு எதிராக பல கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர், இதில் அபாயகரமான இரசாயனங்கள் பயன்படுகிறது என பிப்ரவரியில், அமெரிக்க நீதிமன்றம் நிறுவனத்திற்கு ரூ .475 கோடி அபராதம் விதித்தது. இந்த வழக்கில், ஜாக்குலின் ஃபாக்ஸ் என்ற பெண் கருப்பை புற்றுநோயால் இறந்தார்.
ALSO READ | மின் சாதனம், மொபைல் வேண்டவே வேண்டாம் என ஓடும் உலகின் அதிசய மனிதர்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR