வெந்தயத்தின் முக்கிய குறிப்புகள்

Last Updated : Sep 20, 2017, 03:24 PM IST
வெந்தயத்தின் முக்கிய குறிப்புகள்  title=

தன்னை அழித்துக் கொண்டு நிலையிலும் மணம் மற்றும் சுவையை அதிகரிக்கும் பொருள் தான் வெந்தயம். இதன் குணநலன்கள்,மருத்துவம், பலன்கள்  பற்றி பார்போம்!!!  

வெந்தயா கீரை மற்றும் வெந்தயத்தில் உள்ள சத்துகள் : நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன, மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம்போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலங்கள் உள்ளன.இதில்  வைட்டமின் “ஏ” உள்ளது.

வெந்தயக்கீரை  உணவில்  எடுத்துக்கொள்ளும்போது  மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறிசிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயம்  கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். 

வெந்தயம் மூலம் தீர்க்கபடும் நோய்கள் : முறையற்ற மாதவிடாய், வெள்ளைபடுதல், கர்ப்பப்பைக் கோளாறுகள் அனைத்துக்கும் இயல்பான தீர்வு தரும் . வயிற்று கடுப்பு, உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி, கொலஸ்ரால், மூலச்சூடு, மலக்கட்டு, சீதபேதி, குடல் புண்,மூலநோய், உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்றவை தீர்வு அடையும்.

# வெந்தயம் மாதவிடாய் பிரச்சனைகளை  தீர்க்கும் : 40 வயதை எட்டிய பெண்களுக்கு இறுதி மாதவிடாய் நெருங்கிக் கொண்டிருக்கும். அந்நேரத்தில் அவர்கள் மிகுந்த வேதனை உணர்வதோடு, மனநிலை, உடல் சேர்வு யடையும் பொது  ஒருவித வெப்ப உணர்வு போன்றவற்றை சந்திக்க நோரிடும், அப்பொழுது  முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் பெண்கள் உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம்.

# தாய் பால் சுரக்க  வெந்தயம் உடன் தயிர் சேர்த்து தினமும் உண்டால் பால் அதிகம் சுரக்கும்,மற்றும்  மார்பகத்தை பெரிதாக்க  ஆசை இருக்கும் பெண்களுக்கு வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால்  இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

# வெந்தயம் உடல் எடை குறைக்கும் :  வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. வெந்தயம் சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

வெந்தயம் பிரசவ நேரத்தில் : பெண்கள் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். 

வெந்தயம் பாலியல் ஆரோக்கியம் : வெந்தயத்தை ஒருவர் எந்த வடிவில் உட்கொண்டு வந்தாலும், அவரது பாலுணர்ச்சி அதிகரிக்கும் என ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தனை நலன்கள் உள்ளன வெந்தயத்தில்  மட்டும் எனவே உணவில் வெந்தயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Trending News