Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன!

கொரோனா காலத்தில், மிக அவசியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வகை  உணவுகள் பெரிதும் உதவிடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 6, 2022, 04:53 PM IST
Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன! title=

கொரோனா காலத்தில், தொற்றில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நேரத்தில், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உணவில் என்ன சேர்க்க வேண்டும் என்பதை நிபுணர்கள் கூறுவதை தெரிந்து கொள்ளலாம்.

நாட்டில் கொரோனா தொற்று நோய் (Corona Virus)  தாக்கியதில் இருந்தே, இந்த தொற்றுநோயைத் தவிர்க்க நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்  குறித்த  ஆலோசனை வழங்கிய ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆரோக்கிய நிபுணர் வருண் கத்யா கீழ்கண்ட உணவுகளை பரிந்துரைக்கிறார்:

1 .  பப்பாளி
 பப்பாளியில்  வைட்டமின் சி நிறைந்து உள்ளது, செரிமான அமைப்பை வலுவாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் பப்பாளியில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் ஃபோலேட் ஆகியவை உடலை பல பிரச்சனைகளில் இருந்து விலக்கி வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ALSO READ  | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!

2 . பாதாம்

பாதாம் பருப்பில்  உள்ள வைட்டமின் ஈ, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதனால், உணவில் பாதாம் சேர்ப்பதன் மூலம் கொரோனா மட்டுமல்ல உடலின் பல பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்.

3.  தயிர்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த தயிர் பெரிதும் உதவும். தயிரில் உள்ள வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆனால் உங்கள் உணவில் சந்தையில் இருந்து வாங்கிய தயிரை (Curd) சேர்த்துக் கொள்வதை விட, நீங்கள் வீட்டில் உறைய வைக்கும் தயிர் மிகவும் சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4 .  கீரை
கீரையில் வைட்டமின் சி உள்ளது. மேலும், இதில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் உள்ளன.  எனவே, கீரையை உணவில் சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம். கீரையை சமைத்தோ அல்லது கீரை ஜூஸ் வடிவிலோ உணவில் சேர்க்கலாம்.

5. நெல்லிக்காய்

வைட்டமின் சி நெல்லிக்காயில், அதிகம்  காணப்படுகிறது. எனவே  உணவில் நெல்லிக்காயை சேர்த்தால்,  நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படும். நெல்லிக்காய் ஜாம், நெல்லிக்காய் சட்னி, நெல்லிக்காய் சாறு போன்ற வடிவில்  உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

(குறிப்பு - இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றைச் சேர்க்கக் கூடாது)

ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News