30 வயது காலகட்டம் என்பது குடும்பம், வேலை என்று ஓரளவு செட்டில் ஆகும் காலகட்டம் ஆகும். ஆனால் இந்த வயதில் இருந்து தான் நமது எலும்புகளின் அடர்த்தி படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது என்று உங்களுக்கு தெரியுமா. பல நேரங்களில், ஊட்டச்சத்து குறைபாடு, வாழ்க்கை முறை மாற்றம் அல்லது தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களின் காரணமாக, எலும்புகள் பலவீனமய தொடங்குகின்றன, இதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு ஆபத்து ஏற்படத் தொடங்கிவிடுகிறது.
ஆனால் இனி நீங்கள் பீதி அடைய தேவையில்லை.. வயது ஏற ஏற வலுவிழக்கும் எலும்புகளை வலுப்படுத்த முடியும். இதற்கு நீங்கள் சில எளிய மாற்றங்களை செய்தால் போதும். அதிலும் சில முக்கியமான பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் எலும்புகளை எளிதாக நீங்கள் வலுவாக வைத்திருக்க முடியும். எனவே 30 வயதிற்குப் பிறகு உங்களின் எலும்புகளை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இப்போது தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | உங்கள் துணையை படுக்கையில் மகிழ்ச்சியாக வைத்திருக்க..‘இதை’ செய்யுங்கள்!
கால்சியம் மற்றும் வைட்டமின் டி:
எலும்பு உருவாவதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு நீங்கள் தினமும் குறைந்தபட்சம் 1000 மி.கி கால்சியம் மற்றும் 600-800 யூனிட் வைட்டமின் டி எடுத்துக்கொள்வது அவசியமாகும். அதன்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிரந்த பால், தயிர், பாலாடைக்கட்டி, பச்சை காய்கறிகள், சோயாபீன் மற்றும் பாதாம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சூரிய ஒளியில் உடலை வெளிப்படுதல் மற்றும் முட்டை, காளான்கள் போன்ற உணவுகள் சாப்பிடுவதும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.
உடல் செயல்பாடு அதிகரிக்கும்:
தசைகளைப் போலவே, நமது எலும்புகளும் தொடர்ந்து நாம் செய்யும் சில உழைப்பால் வலுவடையும். எனவே இதற்கு வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும். முக்கியமாக விறுவிறுப்பான நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது யோகா போன்ற உடற்பயிற்சிகளை வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களாவது செய்வது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்:
அதிக எடை எலும்புகள் மீது அழுத்தத்தை தருகிறது மற்றும் அவற்றை பலவீனப்படுத்தக்கூடும். எனவே ஆரோக்கியமான முறையில் எடையை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு சரியான டயட் உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான அளவு தூக்கம் மூலம் உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
கெட்ட பழக்கங்களை செய்வதை தவிர்க்கவும்:
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த பழக்கங்களில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்:
மன அழுத்தத்தைக் குறைக்க போதுமான தூக்கம், யோகா செய்யுங்கள். எலும்புகளுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி தவிர, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ண முயற்சியுங்கள்.
வலுவான எலும்புகள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாகும், எனவே இந்த எளிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வலுவான எலும்புகளை வைத்திருப்பதுடன் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். எனவே தாமதமின்றி இன்றே உங்கள் எலும்பில் சிறப்பு கவனித்தை செலுத்துங்கள்.
மேலும் படிக்க | ஜாக்கிரதை! வெந்நீரில் முகம் கழுவினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ