இந்தியாவை பொருத்தவரை தைராய்டு பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகளாக பலர் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிரது. தேசிய அளவில் மொத்தமாக சுமார் 42 மில்லியன் மக்கள் தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனராம். நம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் ஆற்றல், தைராய்டு க்ளாண்ட் சரியான ஹார்மோன்களை சுரக்காத போது பாதிப்புக்குள்ளாகிறது. இப்படி மெட்டபாலிச சத்துக்கள் குறையும் போது நம் உடலில் உள்ள கலோரிகளின் அளவும் அதிகமாக கூடும். இதனால் நம் உடலின் எடை கூட அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன. இதனால்தான் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதாக சில மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர சில உடற்பயிற்சிகளும் தினசரி நடவடிக்கைகளும் இருக்கின்றன. அவை என்னென்ன? இதை செய்தால் உடல் எடை குறையுமா? இங்கு பார்ப்போம்.
1.நடைப்பயிற்சி:
தினசரி நடைப்பயிற்சி செய்வது தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் நல்லது. தினசரி 30 நிமிடம் வேகமாக நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடலில் உள்ள கலோரியின் அளவு கணிசமாக குறையும். இதனால் உடலில் உள்ள ஆற்றலும் அதிகரித்து நம்மை ஆக்டிவாக வைத்திருக்க உதவும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சியை தங்களது தினசரி நடவடிக்கைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2.நீச்சல்:
நடைப்பயிற்சியை போல, நீச்சல் பயிற்சியும் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் நடவடிக்கைகளுள் ஒன்று. தினமும் 30 முதல் 45 நிமிடங்களுக்கு நீச்சலடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு குறையும். ஒரே மாதிரியான நீச்சல் பயிற்சியை பின்பற்றுவதை விடுத்து ஃப்ரீ ஸ்டைல், ப்ரேக் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக், உள் நீச்சல் ஆகியவற்றையும் செய்யலாம்.
3.உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள்:
உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகளுக்கு ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் என்று பெயர். இதற்கென்று சில பிரத்யேக உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஸ்குவாட், லன்சஸ், பைசப் கர்ல்ஸ் ஆகியவை அதற்கு ஏற்ற பயிற்சிகளாகும். இந்த பயிற்சிகளை தினமும் ஒவ்வொன்றைஇயும் 12 முதல் 15 முறை வரை செய்ய வேண்டும். இதனால் உடல் எடையும் குறையும்.
மேலும் படிக்க | எடை குறைப்பது ரொம்ப ஈசி: பச்சை பயறை இப்படி சாப்பிடுங்க போதும்
4.யோகா:
யோகாசனங்கள் செய்ய புதிதாக ஏதாவது பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்ற அவசியமே இப்போது இல்லை. நமக்கு ஏற்ற, நமது உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை நாம் வீட்டிலேயே செய்யலாம். யோகாசனங்களால் நம் உடல் மட்டுமன்றி மனதும் மேன்மையடையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
6.சைக்கிள் ஓட்டுவது..
சைக்கிள் ஓட்டுவது நம் இதயத்தை பாதுகாக்கும் கார்டியோ உடற்பயிற்சிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தினமும் 30 முதல் 45 நிமிடங்களுக்கு சைக்கிள் ஓட்டி பழகுங்கள். இதனால் உடலில் கொழுப்பு குறையும், உடல் எடையும் கூடாமல் தடுக்கலாம்.
7.மருந்துகளின் உபயோகம்..
தைராய்டு பிர்ச்சனை இருப்பவர்கள் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை பயன்படுத்த வேண்டி இருக்கும், அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே, இந்த பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
மேலும் படிக்க | வெந்தயத்தை ‘இப்படி’ சாப்பிடுங்க... பருமன் குறைய நாங்க கியாரண்டி!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ