நோரா வைரஸ் என்ற புது வைரஸ் தற்போது இந்தியாவில் தனது பாதிப்பைத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே கொரோனா வைரஸால் ஏற்பட்ட மிகவும் மோசமான பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், புதிய வைரஸ் தொற்று பாதிப்பு கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவின் வயநாட்டில் பூக்கோடு கிராமத்தில் கால்நடை கல்லூரி மாணவர்கள் 13 பேர் நோரோ வைரஸ் (NoroVirus) பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், அங்கு மற்றுமொரு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நோரா வைரஸ் என்றால் என்ன? அதிலிருந்து எப்படி பாதுகாப்பது? என்ற அடிப்படை விஷயங்களைத் தெரிந்துக் கொண்டால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இந்த புதிய வைரஸ், விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் வைரஸ் என்றும், சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரில் பரவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
பூக்கோடு கிராமத்தில் 13 மாணவர்கள் நோரா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியிருக்கிறார். விலங்குகளில் இருந்து பரவுவதாக சொல்லப்படும் இந்த வைரஸ், கால்நடை மருத்துவ மாணவர்களை பாதித்திருக்கிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவத் தொடங்கினால், பாதிப்பின் அளவு மிகவும் அதிகமாகும். இந்த வைரஸ் அறிகுறியுடன் மேலும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
READ ALO | சுனாமியை விட ஆபத்தான கொரோனாவின் ஐந்தாவது அலை!
நோரா வைரசுக்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்பதால் அச்சம் அதிகரிக்கிறது. துரிதமாக பரவும் தன்மையுள்ள நோரா வைரஸ் பாதிப்பினால், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் இந்த வைரஸ், தாக்கியதில் இருந்து அது 24 முதல் 48 மணி நேரம் மட்டுமே வாழ்ந்தாலும், இரைப்பை மற்றும் குடல் நோயை ஏற்படுத்திவிடும்.
முதியவர்கள், குழந்தைகள், மற்றும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோரா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அச்சம் அதிகரித்துள்ளது. கொரோனாவைப் போலவே, எச்சில் மற்றும் தொடுதல் மூலமாக நோரா வைரஸ் பாதிக்கும் என்பதால், அதிக கவனம் அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
விலங்குகளின் கழிவுகளின்மீது அமரும் கொசுக்கள் மூலமே மனிதர்களுக்கு இந்த வகை வைரஸ் அதிகமாகப் பரவுகிறது. நோரா வைரஸ் பாதித்தவர்களுக்கு, வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைசுற்றுதல், வயிற்று வலி, காய்ச்சல் ஏற்படுகிறது.
வாந்தி, பேதியாகும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதால், பாதிக்கப்பட்டவர்கள், திரவ பானத்தை உண்ணவேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு நன்றாக கழுவி பயன்படுத்தவேண்டும். நோய் பாதித்தவர்கள் மூலம், விரைவாக நோரா வைரஸ் பரவும் என்பதால், வாந்தி பேதி போன்ற உடல் நலக்குறைவு ஏற்படுபவர்கள், முடிந்த அளவு தனிமையில் இருப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Also Read | உச்சகட்டத்தில் டெல்லியின் காற்று மாசுபாடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR