அதிக கொலஸ்ட்ராலால் அவதியா? இந்த 5 பழங்களை இன்றே உணவில் சேருங்கள்

High Cholesterol Reducing Diet: அதிக கொலஸ்ட்ரால் அளவால் பிரச்சனையில் உள்ளீர்களா? கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த ஒரு சுவையான வழி உள்ளது!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2022, 03:10 PM IST
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் சிறந்த கலவையான தக்காளி, வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
  • கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழங்களில் அவகோடா பழமும் ஒன்றாகும்.
  • அவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
அதிக கொலஸ்ட்ராலால் அவதியா? இந்த 5 பழங்களை இன்றே உணவில் சேருங்கள் title=

கொலஸ்ட்ரால் இன்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது. ஏனெனில் இது பல்வேறு இருதய நோய்களுக்கு மூல காரணமாக உள்ளது. கொலஸ்ட்ரால் மனித உடலில், இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆரோக்கியமான முறையில் செல் உருவாக்கும் செயல்முறையை ஆதரிக்கிறது. இருப்பினும், உடலில் அது அதிகமாக இருந்தால், முழு உடலிலும் கடுமையான தாக்கம் ஏற்படும். குமட்டல், உயர் இரத்த அழுத்தம், மார்பு நெரிசல், கனமான உணர்வு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அதீத சோர்வு ஆகியவை அதிக கொலஸ்ட்ராலின் சில அறிகுறிகளாகும். 

உங்கள் கொலஸ்ட்ராலை நன்றாக நிர்வகிப்பதில், உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உணவைப் பற்றி பேசும்போது, ​​​​அதிக கொலஸ்ட்ரால் உள்ள பலருக்கு பழங்களை உணவில் சேர்க்கலாமா வேண்டாமா என்ற கவலை இருக்கும். கவலை வேண்டாம், உங்கள் தினசரி டயட்டில் சேர்க்க, உங்கள் கொலஸ்ட்ரால் அளவை திறம்பட குறைக்கும் 5 சிறந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 5 பழங்கள்:

1. தக்காளி

பழங்கள் மற்றும் காய்கறிகளின் சிறந்த கலவையான தக்காளி, வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. தக்காளி இதயத்திற்கு உகந்த உணவாகக் கருதப்படுகின்றது. இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

2. பப்பாளி: 

பப்பாளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க | ஒரு வாரத்தில் 5 கிலோ வரை உடல் எடையை குறைக்கும் உணவு முறை 

3. அவகோடா பழம்:

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழங்களில் அவகோடா பழமும் ஒன்றாகும். அவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இவை குறைக்கின்றன. மேலும் இவை எல்டிஎல் மற்றும் எச்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

4. ஆப்பிள்: 

இந்த சுவையான பழம் சருமம் மற்றும் கூந்தலுக்கு மட்டுமல்ல, இதயத்திற்கும் நல்லது. மருத்துவரை நம்மிடமிருந்து தூரமாக இருக்க வைக்க வேண்டுமானால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட வெண்டும் என ஒரு கூற்று உள்ளது. ஆப்பிள், எல்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமற்ற அளவைக் குறைத்து, பல நோய்கள் மூலம் நம் இதயம் சேதப்படுத்தாமல் தடுக்கின்றது.

5. சிட்ரஸ் பழங்கள்: 

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த பழங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் படிக்க | மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்; எச்சரிக்கும் நிபுணர்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News