உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால் இரத்த அழுத்த நோயாளிகள் சில உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இல்லையெனில் அவர்களின் இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டு திடீர் மாரடைப்பு வரலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
இந்த பயிற்சிகளை தவிர்க்கவும்
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இதற்கு சரியான வழியும் உள்ளது. உண்மையில், மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக பிபியை அதிகரிக்கும் பயிற்சிகளைச் செய்வது, உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஆபத்தானது. இந்த பயிற்சிகளில் எடை தூக்குதல், ஸ்பிரிண்டிங், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங், ஸ்குவாஷ் போன்றவை அடங்கும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!
அதேபோல் இவற்றைத் தவிர வேறு ஏதேனும் உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தலைவலி, உடல் வலி, அதீத சோர்வு அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகள் மேற்கொண்டால் உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பயிற்சிகள் அனைத்தும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
- நடைபயிற்சி
- ஜாகிங்
- ஸ்கிப்பிங் செய்வது
- ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி
- டான்ஸ்
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உடற்பயிற்சி செய்யும் போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
* மெதுவான வேகத்தில் உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.
* இரத்த அழுத்தம் அதிகரித்தால், படிப்படியாக உடற்பயிற்சியை நிறுத்துங்கள்.
* உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
* அதிக டென்ஷன் எடுக்காதீர்கள் மற்றும் கனமான உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்.
* தேவையானதை விட அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.
6 விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்
* காபி: உயர் இரத்த அழுத்த நோயாளிகள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காபி மற்றும் சோடா போன்ற பானங்கள் தீங்கு விளைவிக்கும். நீங்களும் தேநீரைத் தவிர்த்தால் நல்லது.
* மசாலா: அதிக காரமான உணவுகள் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உணவில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள் இரத்த அழுத்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
* சர்க்கரை: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதிக சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும், இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
* உப்பு: அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உப்பு அதிகமாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* ஊறுகாய்: எந்த உணவுப் பொருளையும் பாதுகாக்க உப்பு அவசியம். உணவு விரைவில் அழுகுவதை உப்பு தடுக்கிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உப்பு சேர்த்து பாதுகாக்கப்பட்ட பொருட்களை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.
* பாக்கெட் உணவு: உயர் இரத்த அழுத்தம் நோயாளிகள் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்டாக்கில் சோடியம் அதிகமாக உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சோடியம் நல்லது இல்லை.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ தமிழ் நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR