சோர்விலிருந்து விடுபட இதை ஃபாலோ பண்ணுங்க

சோர்விலிருந்து நாம் விடுபடுவதற்கு நம்மிடம் புழக்கத்தில் இருக்கும் சில வழிகளையே தேர்ந்தெடுத்து அதன் மூலம் சோர்வை விரட்டலாம்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 17, 2022, 05:56 PM IST
  • உடல் சோர்வை போக்குவதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றன
  • காலை உணவை எப்போதும் தவிர்க்கக்கூடாது
  • தண்ணீரை அடிக்கடி குடித்தால் சோர்வு நீங்கும்
சோர்விலிருந்து விடுபட இதை ஃபாலோ பண்ணுங்க title=

வேகமாக ஓடும் இந்தக் காலத்தில் அனைவருக்குமே தவறாக வரும் ஒன்று சோர்வு. அதனைப் போக்க பலர் பல வழிகளை தேர்ந்தெடுத்தாலும் அதில் பெரும்பாலும் அவர்கள் வெற்றி காண்பதில்லை. ஆனால் நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் வழிகளை வைத்தே சோர்வை விரட்டலாம்.

தண்ணீர்:

உடலுக்கு தண்ணீர் போதிய அளவில் இருந்தால்தான் சீராக இயங்கும். உடலில் நீர் சரியான அளவில் இல்லாவிட்டால், உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வை உண்டாக்கி, கவனச்சிதறலை அதிகரித்துவிடும். எனவே அவ்வப்போது தண்ணீரைக் குடித்தால் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.

உடற்பயிற்சி:

தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். எனவே ரன்னிங், வாக்கிங், யோகா, சைக்கிளிங் போன்ற எளிமையானசில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டால் மாற்றத்தை அனுபவிக்கலாம்.

தூக்கம்:

தூக்கமின்மை சோர்வை உண்டாக்குவதோடு, உடலின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தினமும் சரியான அளவு தூங்குவதோடு ஒரே மாதிரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும்.

அதிகப்படியான எடை:

உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

அடிக்கடி சாப்பிடவும்:

கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை சாப்பிடவும் மற்றும் சிறு இடைவெளியில் ஏதேனும் ஆரோக்கியமான உணவுப் பொருளை சாப்பிட்டவாறு இருக்கவும். இப்படி சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். உடல் எடை அதிகரிக்குமோ என்ற அச்சம் வேண்டாம்.\

மேலும் படிக்க | Weight Loss Food: இந்த பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்

அதுமட்டுமின்றி காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரு நாளில் காலை உணவுதான் மிகவும் முக்கியமானது. காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தாலே, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மசாலா ஒரு வரப்பிரசாதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News