காலை தலைவலிக்கான காரணங்கள்: சிலர் 7 முதல் 8 மணிநேரம் தூங்கிய பிறகும் சோர்வால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் போதுமான அளவு தூங்கினாலும், நாள் முழுவதும் தலைவலி இருந்து கொண்டே இருப்பதாக புகார் கூறுகின்றனர். உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவருக்கோ இதுபோன்ற பிரச்சனை இருந்தால், அவர் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும், இல்லையெனில் இந்த பிரச்சனை ஒரு தீவிர நோயாக உருவாகலாம். இந்த சிக்கலில் இருந்து விடுபடுவது எப்படி என்று பார்ப்போம்.
தலைவலிக்கான காரணம்
காலையில் தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். உடலில் தண்ணீர் சத்து பற்றாக்குறையினால் தலைவலி ஏற்படலாம். அதிகமாக மது அருந்தினால் அவருக்கு தலைவலி பிரச்சனை வரலாம். சில நோய்களாலும் தலைவலி பிரச்சனை தொடர்ந்து வாட்டும். சிலருக்கு அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாகவும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. தொடர்ந்து அதிக வேலை பளு இருந்தாலும் தலைவலி ஏற்படுகிறது. . பலர் இரவில் தாமதமாக நீண்ட நேரம் கணினியில் வேலை செய்கிறார்கள். அதன் காரணமாகவும் அவர்களுக்கு காலையில் எழுந்ததும் தலைவலி ஏற்படலாம்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன
பொதுவாக போதுமான அளவு தண்ணீர் குடித்தால் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இதனுடன், சுகாதார நிபுணர்களின் சில டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் காலையில் எழுந்தவுடன் தலைவலி பிரச்சனையை எதிர்கொண்டால், ஐஸ் கட்டியை வைத்து நெற்றியில் ஒத்தடம் கொடுக்கவும். இது உங்கள் பிரச்சனையை குறைக்கும். சிலருக்கு கழுத்து மற்றும் தலைக்கு இடையில் ஹீடிங் பேட் வைத்தால் நிவாரணம் கிடைக்கும். இதனுடன், ஒரு சிறிய அளவு காஃபின் உங்களுக்கு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
காலையில் எழுந்தவுடன் தலைவலி இருந்தால், அதன் காரணமாக மன உளைச்சல் ஏற்படும். அப்படிப்பட்ட தருணங்களில் ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் உட்கொள்ளுங்கள். எலுமிச்சம்பழ நீர் அருந்தினால் மார்னிங் சிக்னஸ் நீங்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ