மழைகாலங்களில் நோய்களிடம் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்..!!!

தற்போது மழைக்காலம் என்பதால், சாதாரண சளி, காயச்சல் மட்டுமல்லாது டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, குளிர் காய்ச்சல் என பலவித நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 17, 2021, 12:11 PM IST
மழைகாலங்களில் நோய்களிடம் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்..!!! title=

தற்போது மழைக்காலம் என்பதால், சாதாரண சளி, காயச்சல் மட்டுமல்லாது டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, குளிர் காய்ச்சல் என பலவித நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மழைக்காலங்களில் டான்சில் மற்றும் சைனஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும்.

மழைக்காலங்களில் (Rainy Season), நோய்களிடம் இருந்து தப்பிக்க, மக்கள் கீழ்கண்ட சில வழிமுறைகளை பின்பற்றினால், நோய்லிருந்து தப்பிக்கலாம். 

1. மழை வெள்ள காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க 20 நொடிகள் முறையாக சோப்பு பயன்படுத்திய கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.

2. குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து அதன் பிறகு ஆற வைத்து குடிக்க வேண்டும். 

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

3. பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, சமைத்தவுடன் உணவினை சூடாக சாப்பிடுவது நல்லது. 

4. மழை காலங்களில் உணவுகளை சூடாக சாப்பிடுவது நல்லது.

5. திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும். 

ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!

6. வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

7. காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். வீட்டில் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. 

8. வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். 

9. வீட்டில் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று வகை பிரித்து அப்புறப்படுத்தினால், கொசுத்தொல்லைகளை தவிர்க்கலாம்

10. குப்பைகளை அப்படியே சேர்த்து வைத்தால் அதில் இருந்து வரும் ஈ, கொசுக்கள் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்படும்.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News