திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு பக்தர்களை அழைத்து வரும் டிராவல் ஏஜென்சிகளின் தரிசன ஒதுக்கீட்டை நிறுத்த உள்ளனர். திருமலை திருப்பதி வாரியத்திற்கு சொந்தமான தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு பதிலாக, அவற்றை எடுத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவர் பி. நாயுடு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கட்டுப்பாடு! பைக்கிற்கு ரூ. 200 மட்டுமே அனுமதி!
திருப்பதி தேவஸ்தான வாரியம்
TTD அறக்கட்டளை வாரியம் எனப்படும் திருமலை கோவிலின் பொறுப்பாளர்கள், விசாக சாரதா பீடம் விதிகளை மீறியதாக குற்ற சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால், கோவில் வளாகத்தில் உள்ள மடத்தின் சிறப்பு அனுமதியை பறிப்பது குறித்து யோசித்து வருகின்றனர். கோவிலில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக, அறங்காவலர் குழு மாநில அரசிடம் கடிதம் மூலம் கேட்க உள்ளனர். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், திருப்பதியில் இந்துக்கள் அல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தியது வாரியத்தில் உள்ள பலரை வருத்தமடைய செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சீனிவாச சேது மேம்பாலம் அடுத்த நான்கு மாதங்களுக்கு கருட வரதி என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இனி கோவில் தொடர்பாக யாரும் அரசியல் கருத்துக்களை பேசக்கூடாது என பொறுப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். யாராவது அப்படி செய்தால், அவர்கள் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாரியம் எச்சரித்துள்ளது. அதே போல கோவிலுக்கு வரும் அரசியல் தலைவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் என யாரும் கோவிலில் இருக்கும்போது தங்கள் அரசியல் கருத்துக்களை பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடந்த திருமலை ஸ்ரீவாரி கோயிலில் நடந்த வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் போது சிறப்பாகப் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்க TTD வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.
2-3 மணி நேரத்தில் தரிசனம்!
செயற்கை நுண்ணறிவு (AI) எனப்படும் ஸ்மார்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை அனைவரும் எளிதாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை 20-30 மணிநேரத்தில் இருந்து 2-3 மணிநேரமாக குறைக்க இது பயன்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், திருப்பதியில் வசிப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க் கிழமையன்று எளிதாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் வாரியம் தெரிவித்துள்ளது. திருமலையில் உள்ள அன்னபிரசாத வளாகத்தில் தினசரி லட்டு தயாரிப்பில் சுவையான செய்முறையை சேர்க்க வாரியம் முடிவு செய்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ