நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கொய்யா: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்

Guava for Diabetes Control: மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யாவை உட்கொள்வதால், செரிமானம் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 13, 2022, 07:01 PM IST
  • வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு கொய்யா இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு இளஞ்சிவப்பு கொய்யாவால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாகும்.
  • ஒரு கொய்யாவில் 4.9 கிராம் சர்க்கரை உள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கொய்யா: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் title=

நீரிழிவு நோயாளிகள் பழங்களை உட்கொள்வது இனிப்பு உணவுக்கான அவர்களின் ஏக்கத்தை தணிக்கிறது. பழங்களை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரை நீரிழிவு நோயாளிகளின் இனிப்பு உணவுக்கான ஏக்கத்தையும் பூர்த்தி செய்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள பழங்களில் ஒன்று கொய்யாப்பழம் ஆகும். மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யாவை உட்கொள்வதால், செரிமானம் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.

கொய்யா ஒரு மலிவான பழமாகும். இதன் சீசன் பொதுவாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும். கொய்யாவில் வெள்ளை கொய்யா மற்றும் இளஞ்சிவப்பு கொய்யா என இரு வகைகள் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிபுணர்கள் விளக்கியுள்ளனர். 

வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு கொய்யா இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என நிபுணர்களின் கூறுகிறார்கள். எனினும், நீரிழிவு நோயாளிகளுக்கு இளஞ்சிவப்பு கொய்யாவால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாகும். சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையை கட்டுப்படுத்த இளஞ்சிவப்பு கொய்யா எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Cholesterol Level: வயதிற்கு ஏற்ப கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? 

கொய்யா உடல் சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது:

நார்ச்சத்து நிறைந்த பழங்களில் கொய்யா பழமும் ஒன்றாகும். இதனை உட்கொள்வதால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யாவின் நுகர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொய்யாவில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. 

நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பு, வைட்டமின் சி, கே, பி6, ஃபோலேட், நியாசின், துத்தநாகம், தாமிரம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற பண்புகள் நிறைந்த இப்பழங்கள் நீரிழிவு நோயாளிகளை ஆரோக்கியமாக இருக்க வைத்து, சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சர்க்கரையை கட்டுப்படுத்த தினமும் கொய்யாபழத்தை எந்த அளவில் உட்கொள்ள வேண்டும்? 

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, நீரிழிவு நோயாளிகள் காலை உணவுக்குப் பிறகும், இரவு உணவிற்கு முன்பும் எந்த நேரத்திலும் கொய்யாப்பழத்தை உட்கொள்ளலாம். கொய்யாப்பழத்தை காலையில் வெறும் வயிற்றிலும், உறங்கும் நேரத்திலும் சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் 1-2 கொய்யாப்பழம் போதுமானது. ஒரு கொய்யாவில் 4.9 கிராம் சர்க்கரை அளவு உள்ளது. இது மிகவும் குறைவான அளவாகும். சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டு கொய்யாப்பழம் சாப்பிட்டாலும், சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் இல்லை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காபி குடித்தால் ரத்த சர்க்கரை அளவு உயருமா? உண்மை என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News