ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் சாம்பிராணி! ஆயுர்வேத மருத்துவ ரகசியம்

Health Benefits Of Sambrani: சாம்பிராணி என்றால் அதன் புகையும் மணமும் நினைவுக்கு வரும்... சாம்பிராணியை எப்படி சாப்பிட்டால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும் என்ற மருத்துவ ரகசியம் தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 21, 2022, 06:17 AM IST
  • சுற்றுப்புற சூழ்நிலையில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் சாம்பிராணி
  • உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சாம்பிராணி
  • ஆயுர்வேதம் சொல்லும் சாம்பிராணியின் மருத்துவ குணங்கள்
ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் சாம்பிராணி! ஆயுர்வேத மருத்துவ ரகசியம் title=

Health Benefits Of Sambrani: சாம்பிராணி என்றால் அதன் புகையும் மணமும் நினைவுக்கு வரும்... சாம்பிராணியை எப்படி சாப்பிட்டால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும் என்ற மருத்துவ ரகசியம் தெரியுமா? சாம்பிராணி சுற்றுச்சூழலில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாம்பிராணியின் புகையை நறுமணம் என்று சொல்லமுடியாவிட்டாலும், காற்றைச் சுத்திகரித்து வெளிச்சூழலை உயிரோட்டமாக உணர வைக்கும் என்பதால் வீடுகளிலும், தொழில் இடங்களிலும் சாம்பிராணிப் புகை போடுவது வழக்கம். குறிப்பாக மனச்சோர்வு, கவலை இருக்கும்போது சாம்பிராணி புகை போட்டால் சுற்றுச்சூழலில் உள்ள எதிர்மறை தாக்கம் நீங்கி, விரைவில் மன அமைதி திரும்பும்.  

சாம்பிராணி மனதை அமைதியாக்கி, சுற்றுப்புறத்தில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தைக் கொண்டுவருகிறது என்பதைத் தவிர, அது மருத்துவரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளைக் குங்கிலிய மரப் பட்டையைக் கீறி, அதன் கோந்தைச் சேகரித்து, அதில் இருந்து உருவாக்கப்படுகிறது சாம்பிராணி. 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

ஆயுர்வேதத்தில், குடலில் சேரும் வாயுவை அகற்றுவதற்கும்,கபத்தை வெளியேற்றுவதற்கும், மூலம், வயிற்றுப்போக்கு போன்றவற்றைப் போக்குவதற்கும் சாம்பிராணி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சிலவிதமான வாத நோய்கள் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்துவற்காகவும் வெள்ளைக் குங்கிலியம் பயன்படுத்தப்படுகிறது. டானிக் போலவும் சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது.

ஆண்களில் பாலியல் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும், விறைப்புத்தன்மையை நீண்ட நேரம் நீட்டிக்கவும் சாம்பிராணி பயன்படும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இது ஆண்களுக்கான ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.  லுகோட்ரீன்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் பொருட்கள் இதில் உள்ளன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

ஆண் விந்தணு தரத்தை மேம்படுத்தவும், பாலியல் தூண்டுதலை அதிகரிக்கவும் பாலுடன் கலந்து சாம்பிராணித் தூளை குடிப்பது நல்ல பயன் தரும். அதுமட்டுமல்ல, வீடுகளில் சாம்பிராணி போடும் வழக்கமும், மனச்சோர்வை நீக்கி, புத்துணர்வைத் தருவதுடன், நேர்மறையான எண்ணங்களையும் கொடுக்கிறது.  

வெள்ளைக் குங்கிலியக் கோந்தைப் பொடி செய்து நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, மூட்டுகளில் பூசிவந்தால் மூட்டு வலி குணமாகும். அதேபோல், சாம்பிராணியை நெய்விட்டுப் பொரித்து, தண்ணீர்விட்டு நன்றாகக் குழைத்து பெண்கள் உண்டால், வெள்ளைப்படுதல் நிற்கும். 
 வெள்ளைக் குங்கிலியத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணியை 1 கிராம் எடுத்து 1 கோப்பைப் பாலில் கலந்து குடித்தால் இருமல், மார்புச்சளி, ரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும்.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

1 கிராம் சாம்பிராணியுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சீதபேதி சரியாகும் என்று ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.  ஆயுர்வேதத்தில் வயிற்றுக்கடுப்ப்பை சரி செய்யும் மருந்துகளில் ஒன்றில், 10 கிராம் வெள்ளைக் குக்ங்கிலியத் தூளுடன், 20 கிராம் மாம்பருப்புத் தூள், 8 கிராம் இலவம் பிசின் தூள், 20 கிராம் சாதிக்காய்த் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மருந்து தயாரிக்கப்படுகிறது. 

அதேபோல, உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையை குறைக்கவும், சாம்பிராணி பயன்படுகிறது. வெள்ளைக் குங்கிலியத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சாம்பிராணியை 2 கிராம் அளவு எடுத்து, அதை பாலில் கலந்து குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும், உடல் வலிமை பெறும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் 

மேலும் படிக்க | ஊட்டச்சத்தில் தயிருடன் போட்டியிடும் சோயாபீன் தயிர்! பால் அலர்ஜி உள்ளதா? இதை சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News