Golden Blood: தங்கத்தை விட விலையுயர்ந்த ஒரு சொட்டு ரத்தம்! விலை பொன்னை விட அதிகம்

Rarest Golden Blood: ஆர்.எச் என்ற ரத்த வகை உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 45 பேரிடம் மட்டும்தான் உள்ளது, இந்த ரத்தத்தின் ஒரு சொட்டு, தங்கத்தை விட விலை அதிகமானது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 12, 2023, 10:20 PM IST
  • பொன்னை விட விலை அதிகமான ரத்த வகை எது?
  • உலகிலேயே 45 பேருக்கும் மட்டும் இருக்கும் அரிய வகை ரத்தம்
  • 0 ரத்த வகை என்று அறியப்படும் ரத்தம் உலகிலேயே மிக விலையுயர்ந்தது
Golden Blood: தங்கத்தை விட விலையுயர்ந்த ஒரு சொட்டு ரத்தம்! விலை பொன்னை விட அதிகம் title=

Rarest Golden Blood: மனிதர்களுக்கு உள்ள ரத்த வகைகள் A, B, AB, O என நான்கு வகைப்படும்,. அதில் பாசிடிவ், நெகடிவ் என இரு வகை என மொத்தம் 8 வகையில் ரத்தத்தை பிரித்துள்ளனர். இவற்றைத் தவிர ஒரு அரிய வகை ரத்தம் உள்ளது. ஆர்.எச் என்ற ரத்த வகை உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 45 பேரிடம் மட்டும்தான் உள்ளது. இந்த ரத்த வகை பூஜ்ஜிய ரத்தம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, மனித ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த ஹீமோகுளோபின், ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது என்பதுடன், உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. 

ஆர்.எச் வகை ரத்தத்தின் ஒரு துளி கூட, தங்கத்தை விட அதிக விலை கொண்டது என்று கூறப்படுகிறது.  உலகின் மிக அரிதான இந்த ரத்த வகை தங்க ரத்தம் (Golden Blood) என்றும் வர்ணிக்கப்படுகிறது.

ரத்தத்தின் சிறப்பம்சம் 

Rh காரணி பூஜ்யமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த இரத்தம் இருக்கும்., உலகில் 45 பேரின் உடலில் மட்டுமே இந்த இரத்தம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த ரத்தத்தில் ஆன்டிஜென்கள் இல்லை என்பதால், இந்த ரத்தத்தை எந்தவொரு ரத்த வகையை கொண்ட நபர்களுக்கு கொடுத்தாலும், அவரது உடல் அதை ஏற்றுக்கொண்டு விடும். ஜப்பான், பிரேசில், கொலம்பியா, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ரத்த வகையை கொண்ட நபர்கள் வசிக்கிறார்கள்.

மேலும் படிக்க | ஆரோக்கியத்தை குலைக்கும் வைட்டமின் டி குறைபாடு! எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்

அரிய வகை ரத்தம்

இந்த அரிய வகை ரத்தம் உள்ளவர்களுக்கு, ஆர்.எச் காரணி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்காது. பாசிடிவ் அல்லது நெகடிவ் என்று வகைப்பாடு கிடையாது. இந்த அரிய வகை ரத்தத்தில் ஆன்டிஜென்கள் இல்லாததால் இந்த ரத்த வகையை சேர்ந்தவர்கள் எளிதில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அரிதான இந்த இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் தங்கத்தை விட விலை உயர்ந்தது,   .

இந்த இரத்தத்தின் சிறப்பு என்ன?

கிரேக்கத்தில் கடவுள்களின் உடலில் தங்க இரத்தம் பாய்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த தங்க இரத்தம் கடவுள்களை அழியாமல் அமரராக இருக்கச் செய்கிறது. ஆனால் இப்போது மனிதர்களைப் பொறுத்தவரை, இந்த தங்க இரத்தம் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

மேலும் படிக்க | Kidney Stone Alert: சிறுநீரகக்கல்லால் அவதியா? 5 பழங்களை சாப்பிடவேக்கூடாது!

முதன்முதலில் 1961 இல் கண்டறியப்பட்டது. இந்த இரத்தமானது மற்ற பொதுவான இரத்தக் குழுவிலிருந்து மிகவும் வேறுபட்டது, இதன் காரணமாக இது 'கோல்டன் பிளட்' என்று அழைக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படும் போது, ​​ரத்த வங்கியில் சாதாரண ரத்தம் கொடுத்து, தேவைக்கேற்ப ரத்தம் பெறலாம், ஆனால், தங்க ரத்தத்தின் விலை, ​​தங்கத்தை விட அதிகம் என்று தெரிகிறது.

தங்க இரத்தம் உருவாகக் காரணம் என்ன? 

தங்க இரத்தத்தின் காரணம் மரபணு மாற்றம் மற்றும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு செல்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு இரண்டாவது காரணம் நெருங்கிய உறவில் திருமணம் செய்வதாகவும், இதன் காரணமாக தங்க இரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து 'National Library of Medicine' அறிக்கை வெளியிடப்பட்டது. 

மேலும் படிக்க | நுங்கு சாப்பிட்டா 'அது பெரிதாகுமா' தெரியாது... ஆனா இவ்வளவு நல்லது இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News