Skin Care Beauty Tips: நமது உடலை மூடி பாதுகாக்கும் கவசமாக விளங்கும் சருமத்தை அனைவரும் சரியாக பராமரிப்பது கிடையாது. அழகாக ஜொலிக்க மட்டுமல்ல, ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டவும் சருமம் பொலிவுடன் இருப்பது அவசியம். சூரிய ஒளி, புகை, மாறி வரும் உணவு பழக்க வழக்கம் போன்றவை சருமத்தை பாதிக்கிறது.
நமது உடல் ஆரோக்கியத்தின் நிலையை வெளிகாட்டுகிறது சருமம் தான். சீரான, ஆரோக்கியமான உணவை உண்ணாமல் இருந்தாலோ அல்லது போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தாலோ, அது நம் தோலில் எதிரொலிக்கும். நமது சருமம் வறண்டு, துவண்டு போனால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் குறையும்.
சருமத்தை ஏன் பராமரிக்க வேண்டும்?
நமது சருமம் நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு ஆகும். உடலின் மிகப் பெரிய பகுதியான நமது சருமத்தை பராமரிப்பது வெறும் தோற்றப் பொலிவுக்காக என்று நினைத்துவிட வேண்டம். நமது உடலில் உள்ள தோல் தினமும் உதிர்கிறது, உதிர்ந்து கொண்டே செல்லும் அதே நேரத்தில், வளர்ந்துக் கொண்டே இருக்கும் உடல் உறுப்புகளில், தோலும் ஒன்று.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? அப்போ இந்த ரொட்டி மாவு உங்களுக்கு விஷம்
அல்கலைன் உணவு
உடலின் உட்புறத்தில் அமிலம் அதிகமாக இருக்கும் போது அது ஈஸ்ட் பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்ற அனைத்து வகையான பொருட்களையும் வளர்க்கும். செரிமான அமைப்பு சரியாக இல்லாவிட்டால், அது உங்கள் தோலில் தெரியும்.
தூக்கம்
நாம் தூங்கும் போது, நமது தோல் புதிய கொலாஜனை உருவாக்குகிறது. இது வயதவதைத் தடுக்கிறது. எனவே, நன்றாக தூங்கவில்லை என்றால், அது உங்கள் சருமமத்திலும் எதிரொலிக்கும்.
மேலும் படிக்க | ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்னைகளையும் தீர்க்க இந்த பொருள் போதும்
தண்ணீர் குறைந்த அளவில் குடிப்பது
தண்ணீர் குடிப்பதால், நம் உடலின் நச்சுத்தன்மை நீங்குகிறது. எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு நம் சருமம் நன்றாக இருக்கும்.
புற ஊதா கதிர்கள்
சூரிய ஒளி சருமத்திற்கு நல்லது ஆனால் புற ஊதா கதிர்கள் தரும் ஒளி சருமத்திற்கு நல்லது இல்லை. புற் ஊதாக் கதிர்கள், நமது உங்கள் சருமத்தை மந்தமாகவும், வறண்டதாகவும் மாற்றிவிடுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | ’குடிமகன்களின் கவனத்திற்கு’ புத்தாண்டு கொண்டாட்ட ஹேங் ஓவரில் இருந்து வெளிவர டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ