Ginger Benefits: நமது பாரம்பரிய சமையலில் சுவைக்காக மட்டுமல்லாமல், மருத்துவ நன்மையை கருத்தில் கொண்டும் சேர்க்கப்படும் ஒரு பொருள். பழங்கால மருத்துவ குறிப்புகளில், இஞ்சியை பல்வேறு வகையில் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இஞ்சியை சுக்காகவும், பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்களிடையே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் விளைவிக்கப்படும் பொருளான இஞ்சி, சமையலில் மட்டுமல்லாது, மருத்துவ சிகிச்சையிலும் முக்கிய பொருளாக பயன்பட்டு வருகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஸ்கர்பி எனப்படும் வைட்டமின் சி குறைபாட்டினால் உண்டாகும் நோய்க்கு, இஞ்சியை சீனர்கள் பயன்படுத்தி வந்துள்ளது வரலாற்று குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆயுர்வேத குறிப்புகளிலும், இஞ்சி பல்வேறு நோய்களுக்கு மூலிகை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஜீரண சக்தியை தூண்டி உடலின் நுண்ணிய பாதைகளை டீடாக்ஸ் செய்யும் திறன் இஞ்சிக்கு உள்ளதாக மருத்துவர்கள் (Health Tips) கூறுகின்றனர். இந்நிலையில் இஞ்சியின் பல்வேறு பயன்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மூட்டு வலிக்கு மருந்தாகும் இஞ்சி
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் எனப்படும் பொருள், மூட்டு வலி மற்றும் தசை வலிகளுக்கு நல்ல நிவாரணத்தை கொடுக்கிறது. பல்வேறு மருத்துவ இதழில் வெளியாகி உள்ள ஆராய்ச்சியில், இஞ்சியின் மருத்துவ நிரூபிக்கும் வகையில் பல முடிவுகள் வெளிவந்துள்ளன. மூட்டு பிரச்சனை உள்ள பல நோயாளிகளிடம், இஞ்சியை கொடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் அவர்களுக்கு வழியில் இருந்து பெரிய அளவில் நிவாரணம் கிடைத்ததோடு, மூட்டுகளின் செயல்பாடும் மேம்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | உடல் பருமனால் அவதியா? இந்த உணவுகள் வேண்டவே வேண்டாம்
மைக்ரைன் என்னும் ஒற்றை தலைவலிக்கு மருந்தாகும் இஞ்சி
தசை இறுக்கத்தை தளர்த்தும் ஆற்றல் பெற்ற இஞ்சி,. ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தி, மைகிரீன் தலைவலியை குறைக்கிறது. மைகிரீன் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள், ஆரம்ப நிலையிலேயே இஞ்சி டீ குடிப்பதால், வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். ஒற்றைத் தலைவலியின் பக்க விளைவுகளான, குமட்டல் வாந்தி போன்ற பக்க விளைவுகளையும் கட்டுப்படுத்தலாம்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கும் இஞ்சி
இஞ்சி தேநீர் குடிப்பதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புகள் வலி, போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். இஞ்சி டீ தயாரிக்க, இஞ்சியை துருவி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும், சுவைக்காக அதில் சிறிது எலுமிச்சை சாறும் தேனும் கலந்து பருகுவது பல்வேறு வகையில் நன்மை கொடுக்கும்.
உடல் பருமனை குறைக்கும் இஞ்சி
தினமும் இஞ்சி டீ அருந்தி வந்தால், உடல் பருமன் பிரச்சனை தீரும். ஏனென்றால் இஞ்சி மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து தொப்பை கொழுப்பை கரைக்க உதவுகிறது. உடல் பருமனை குறைக்க மெட்டபாலிசத்தை அதிகரிக்க வேண்டியது மிக அவசியம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி
நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, இஞ்சி பெரிதும் உதவும். நீரிழிவு கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த சர்க்கரை அளவினால், கண்பார்வை சிறுநீரகம் ஆகியவை பெரிதளவும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், அடிக்கடி சளி இருமல், தொண்டை வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதோடு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க, தினமும் உணவில் இஞ்சி சேர்ப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உணவுக்குப் பிறகு சிட்ரஸ் பழங்கள் வேண்டவே வேண்டாம்! மறுத்தால் பிரச்சனை தான்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ