மழை சீசனில் இரைப்பை குடல் நோய் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது குறித்து விழிப்பா இருந்தால் பிரச்சனைகள் பெரியளவில் செல்வதற்கு முன்பே குணப்படுத்திவிடலாம்.
குடல் நோய்க்கான காரணம்
இடைவிடாத மழை, மக்களை வீடுகளுக்குள்ளேயே கட்டுப்படுத்துவதால் உடல் செயல்பாடு குறைவது முக்கிய காரணம். இதனால், மழை காலத்தில் செரிமான அமைப்பு பாதிக்கப்படுகிறது. கொழுப்பு, எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் பிரச்சனை இன்னும் அதிகரிக்கும். குறிப்பாக செரிமான அமைப்பின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | மாதுளையை ஜூஸாக குடிப்பதால் இவ்வளவு நன்மைகள்
இரைப்பை குடல் நோய்கள்
ஏற்கனவே இரைப்பை குடல் நோய்கள் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அழற்சி குடல் நோய், நாள்பட்ட டிஸ்ஸ்பெசியா மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி ஆகியவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியில், தொற்று மீண்டும் மீண்டும் இருக்கலாம்
குடல் நோய் கண்டுபிடிப்பது எப்படி?
செரிமான மாத்திரையை சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் குறைந்தால் பயப்பட தேவை இல்லை. குறையாவிட்டால் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். ஏனென்றால், பல நோய்கள் ஒன்றையொன்று பிரதிபலிக்கின்றன, உதாரணமாக இதய நோய் பாதிப்புகளை சிலர் இரைப்பை நோயாக உணரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்களாக எந்தவொரு முடிவுக்கும் வரக்கூடாது.
மலச்சிக்கல் அதிகரிக்குமா?
மலச்சிக்கல் என்பது பருவமழையால் ஏற்படாது. உடல் செயல்பாடு மற்றும் தண்ணீர் குடிப்பதன் அளவு குறைவதால் மலச்சிக்கல் ஏற்படும்.
மழைக்கால டிப்ஸ்
தவறாமல் உடற்பயிற்சி, போதுமான திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான சாப்பாடு அவசியம். அதே நேரம் அதிகமாக சாப்பிட வேண்டாம். கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும், மது மற்றும் புகைப்பழக்கம் கூடாது.
மேலும் படிக்க | Cholesterol பிரச்சனையா? இதை குடித்தால் ஒரே மாதத்தில் கொழுப்பு பனியாய் உருகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ